Ajinomoto logo

அஜி-னோ-மோட்டோ குறித்த உண்மைகள் பற்றி விவாதம்

சென்னை அஜினோமோட்டோ®(MSG) குறித்த உண்மைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் ஆன்லைன் நிகழ்வில் அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. இஷிகாவாகட்சுயுகி மற்றும் அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோரோடு இந்தியாவெங்கிலுமிருந்து புகழ்பெற்ற, பிரபலமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

மெய்நிகர் சந்திப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், ஆஸ்டர் மெட்சிட்டி கொச்சியின் உணவகக் குழலியல் நிபுணர் டாக்டர். ஜெஃப்பி ஜார்ஜ், பெங்களூரு ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் உள்மருத்துவ முதுநிலை நிபுணர் டாக்டர். ஆதித்யா சௌத்தி, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையின் முதன்மை உணவுமுறை வல்லுனர் நவனிதா சாஹா, மும்பையின் சிகே பிர்லா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவவியல் நிபுணர் டாக்டர். அருணா கல்ரா, சென்னை, ரேலா மருத்துவமனையின் இதயவியல் இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர். ஏ. அசோக்குமார், டெல்லி, இந்திரபிரஸ்தா அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸின் உணவுமுறை வல்லுனர் அனிதா ஜட்டானா, சென்யையைச் சேர்ந்த பிரபல உணவுமுறை வல்லுனர் டாக்டர். தாரிணி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற முக்கிய நபர்களுள் சிலர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதய நோயின் காரணமாக ஏறக்குறைய 1.65 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாக அறியப்படுகிறது.  குறித்துரைக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக தினசரி அதிக உப்பை வழக்கமாக தொடர்ந்து உட்கொள்வதனால் இதயநோய்க்கான இடர்வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.  ஆரோக்கியமான ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அளவாக 5 கிராமுக்கும் (1 தேக்கரண்டிகள்)மிகைப்படாத உப்பு என்ற அளவையே உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கிறது.  எனினும் இந்தியாவில் வயது வந்த ஒரு நபரின் சராசரி தினசரி உப்பு உட்கொள்ளல் அளவு 11 கிராம் (2 தேக்கரண்டிகள்) என்பதாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மெய்நிகர் நிகழ்வில் பேசிய பிரபல உணவுமுறை நிபுணரான, டாக்டர். தாரிணி கிருஷ்ணன், இயற்கை மூலப்பொருட்களிலிருந்து இது உற்பத்தி செய்யப்படுவதால் மோனோ சோடியம் குளூட்டாமேட் மனிதர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. குளூட்டாமிக் அமிலம் அல்லது குளூட்டாமேட் என்பது, இயற்கையில் இருக்கக்கூடிய ஒரு அமினோ அமிலமாகும். மக்களால் பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளில் இது காணப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், தக்காளி, பாலாடைக்கட்டி ஆகியவற்றில் மட்டுமின்றி, தாய்ப்பாலிலும் கூட இந்த அமிலம் இருக்கிறது.  நீர், சோடியம் மற்றும் குளூட்டாமேட்டை உள்ளடக்கிய ஒரு சுவை மேம்படுத்தியாக MSG திகழ்கிறது. நாம் உட்கொள்கிற உணவுக்கு ஊட்டச்சத்து மதிப்பையும் இது சேர்த்து தருகிறது. ஜப்பானிய தயாரிப்பான MSG-ஐ பயன்படுத்துவதன் மூலம் உணவின் சுவையை நம்மால் சிறப்பாக மேம்படுத்த இயலும். அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கக்கூடிய பல ஆரோக்கிய பலன்களையும் நம்மால் பெறமுடியும்  என்று கூறினார்.

Thyroid Eye Disease Previous post கொரோனாவுக்கு பின் தைராய்டு கண்நோய் பாதிப்பு  அதிகரித்துள்ளது!
Next post முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி  நடத்திய  “வெற்றிக்கான இலக்கு”