ICICI Pru iProtect Return of Premium

ஐசிஐசிஐ புரூ ஐபுரொடெக்ட் ரிட்டர்ன் ஆஃப் பிரிமீயத்தின் நன்மைகள்!

கோவை : ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் புதுமையான ஒரு நீண்ட கால காப்பீட்டு திட்டமான ‘ICICI Pru iProtect Return of Premium’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளரை மையமாக கொண்ட, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையிலான உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிலைகளின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதையும் உள்ளடக்கிய காப்பீட்டின் தேவையை தானாகவே சரி செய்யக் கூடியதாக இந்த பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.

லைஃப் ஸ்டேஜ் கவர் (Life-stage Cover)  என்பது புதுமையான அம்சங்களை கொண்டதாகும். இது வாடிக்கையாளரின் வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப உறுதியான தொகை அல்லது காப்பீட்டை தானாகவே சரி செய்து வழங்கக் கூடியதாகும். தொடக்க கால கட்டங்களில் வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது ஆயுள் காப்பீட்டை உயர்த்திக் கொள்ள உதவுகிறது. மேலும், பிந்தைய காலங்களில் வாழ்க்கை பொறுப்புகள் குறைகின்ற காலத்தில் தானாகவே காப்பீட்டை குறைத்து கொள்ளவும் உதவுகிறது. முக்கியமாக, பாலிசியின் காலம் முழுவதும் பிரீமியம் தொகை மாறாததாகவே இருக்கும். தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஏற்ற ஆயுள் காப்பீட்டை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக அமையும். மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு தகுந்தபடி, வாடிக்கையாளர்களில் 60 அல்லது 70 வயதுக்குள் செலுத்தப்பட்ட பிரிமீயத் தொகையில் 105% திரும்ப பெறுவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குவதுடன், பாலிசி காலத்தின் இறுதி வரை அல்லது முதிர்வு வரை தொடர்ந்து பாதுகாப்பையும் அளிக்கிறது. லெவல் கவர் (Level Cover) பாலிசியானது, இறப்புக்கான காப்பீட்டு பலனுடன் கூடிய வாழும் போதே கிடைக்கும் காப்பீட்டு பலனையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

Dilsher Singh_Founder & CEO_Zupee Previous post அடுத்தடுத்தக்கட்ட வளர்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய கேமிங் நிறுவனமான Zupee
IIT Madras Alumni Next post IIT Madras Alumni Association Conducts Online Cryptic Crossword Puzzle!