காவேரி மருத்துவமனையில் இதய இயக்கமீட்புக்காகஇம்பெல்லா சிகிச்சை
சென்னை: கார்டியோஜெனிக் அதிர்ச்சி என்பது, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு பாதிப்பு நிலையாகும். உடலின் எஞ்சிய பகுதிகளுக்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் செறிவுள்ள இரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் பணியை இதயம் திடீரென நிறுத்திவிடுவதைத்தான் இது குறிக்கிறது. மாரடைப்பு அல்லது தீவிர இதய தசையழற்சியால் மிக வேகமாக உருவாகின்ற ஒரு அவசரநிலை சூழலாக இது இருக்கிறது. உலகின் அனைத்து இடங்களிலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சூழலாக இது இருக்கும். நிபுணத்துவ மருத்துவர்களின் சிகிச்சை மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உடனடியாக இதற்கு சிகிச்சையளிக்காவிடில் இத்தயை நேர்வுகளில் உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கும். உலகின் மிகச்சிறிய இதய பம்ப் ஆக திகழும் இம்பெல்லா, இதயத்தின் இடது கீழறையிலிருந்து ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட இரத்தத்தை மூளைக்கும் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கும் வழங்குகின்ற திறன் கொண்டதாகும். பாதிப்படைந்த இதயம் ஓய்வெடுக்கவும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டெழவும் நேரத்தை வழங்குவதன் மூலம் இது இதயத்திற்கு உதவுகிறது.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, சமீபத்தில் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட இதய தசையழற்சி பாதிப்புள்ள 18 வயதான இளைஞருக்கு இம்பெல்லா மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. தைரியமான, கற்பனைத்திறன் திறன் வாய்ந்த மற்றும் பயனளிக்கும் இந்த சிகிச்சை செயல்முறை மூலம் தமிழ்நாட்டில் இம்பெல்லா இதயமீட்பு செயல்திட்டத்தை இம்மருத்துவமனை தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் திடீரென்று அதிக ஆபத்தான, இதயநோய் மற்றும் கார்டியோஜெனிக் அதிர்ச்சி பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு கேத் லேபிலேயே இம்பெல்லாவுக்கான கண்ட்ரோலரையும், பம்ப்பையும் இம்மருத்துவமனை கொண்டிருக்கிறது.
இதயவியல் துறையின் முதுநிலை மருத்துவரான டாக்டர். ஆர். அனந்தராமன் பேசுகையில், 18 வயதான ஒரு இளைஞருக்கு இதய பாதிப்பின் அறிகுறிகள் காணப்பட்டன. நோயறிதல் செயல்பாட்டில் அந்த இளைஞருக்கு கோவிட் தொற்றினால் இதய தசையழற்சி இருப்பது உறுதிசெய்யப்பட்டது (SARS Cov 2 வைரல் தொற்றின் காரணமாக இதயத்தசைகள் பலவீனமடைவது). சென்னை, காவேரி மருத்துவமனையின் கேத் லேபிற்கு அந்த இளைஞர் உடனடியாக அழைத்து வரப்பட்டார். அங்கு ஒரு கதீட்டர் வழியாக இம்பெல்லா சாதனம் அவருக்குப் பொருத்தப்பட்டது. அந்த சாதனம் பொருத்தப்பட்டவுடன் இதயத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உயிரை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்வதற்காக உடலின் பிற உறுப்புகளுக்கு இரத்தஓட்டத்தையும் மற்றும் ஆக்சிஜன் வழங்கலையும் இம்பெல்லா சாதனம் கவனித்துக்கொண்டது. இச்சிகிச்சை வழங்கப்பட்ட ஐந்தாவது நாளிலிருந்து, அந்த இளைஞரின் இதயம் அதன் இயல்பான செயல்பாட்டை மீண்டும் தொடங்கியது,” என்று கூறினார்.
இதயவியல் துறையின் முதுநிலை மருத்துவரான டாக்டர் மனோஜ் பேசுகையில், “நிபுணத்துவம் வாய்ந்த தீவிர சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் கிடைக்கப்பெறாதபோது கார்டியோஜெனிக் அதிர்ச்சி ஏற்பட்ட நோயாளிகள் மத்தியில் உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாக (70 -90% வரை) இருக்கிறது. உடனடி சிகிச்சை மற்றும் இச்சாதனத்தின் பயன்பாட்டின் மூலம் கிடைக்கும் ஆதரவினால் உயிர்பிழைப்பு விகிதத்தை 60% – க்கும் அதிகமாக உயர்த்த முடியும். இம்ப்பெல்லா கண்ட்ரோலர் மற்றும் பம்ப் வந்துசேரும் வரை காத்திருக்கும் நேரத்தில் கார்டியோஜெனிக் அதிர்ச்சி பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இரத்தஅழுத்தத்தை பராமரிப்பதற்காகவும் மற்றும் சிகிச்சை செயல்முறைக்குப் பிந்தைய பராமரிப்பை கண்காணிக்கவும் பல ஐனோட்ரோப் மருந்துகள் தரப்படுகின்றன (இதற்கு 24 முதல் 48 மணி நேரங்கள் வரை ஆகக்கூடும்).