நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் தொடர்ந்து சிறப்பான செயல்பாடு, ஒரு பங்கிற்கு ரூ. 2.98 தொகை அறிவிப்பு
சென்னை: நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் (என்எஸ்இ: என்எக்ஸ்டி/பிஎஸ்இ: 543913), இந்தியாவின் முதலாவது சில்லரை வர்த்தக நிறுவனம், ஆர்இஐடி, செப்டம்பர் 30, 2023-அன்றுடன் முடிவடைந்த தனது இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை (முதலாவது முழு காலாண்டு) வெளியிட்டுள்ளது. நெக்சஸ் மால் நிர்வாக பிரைவேட் லிமிடெட் இயக்குநர் குழுவினர்தான் நெக்சஸ் செலக்ட் டிரஸ்டின் நிர்வாகிகளாவர். முன்னதாக நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு அதற்கு நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக முக்கிய அம்சங்கள்
(2024ம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு)
- வலுவான நிர்வாக செயல்பாடு குத்தகை ஒப்பந்தம் 97% அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்காண்டு 18% வளர்ச்சி வாடகை விற்பனை வளர்ச்சி 2024 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரிப்பு
- நிகர செயல்பாட்டு வருமானம் ரூ. 3,909 மில்லியன் (ஆண்டுக்காண்டு 17% வளர்ச்சி) 2024-ம் நிதி ஆண்டு இலக்கை எட்டுவதற்கான வகையில் செயல்பாடு
- சில்லரை வர்த்தக வாடகைக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2022 செப்படம்பரைக் காட்டிலும் 120 அடிப்படை புள்ளிகள் உயர்வு
- ஸ்திரமான நிதி நிலை பிணைச் சொத்து மதிப்பு விகிதம் 14%. மிகக் குறைந்த கடனுக்கான வட்டி விகிதம் 8.3%, ஏஏஏ/ கடன் முதிர்வால் ஸ்திரமான நிதி நிலை
- முதல் தவணையாக ரூ. 4,521 மில்லியன் தொகை ஒரு பங்கின் மதிப்பு 2.98 என்ற அளவில் 100% திரும்பப் பெறத் தக்கவகையில் அதாவது பட்டியலிடப்பட்ட நாளிலிருந்து (மே 19, 2023) செப்டம்பர் 30, 2023 வரையான காலம் வரை. மொத்த பகிர்வில் 62% தொகை ஈவுத் தொகையாகவும் (வரி விலக்குடையது), 28% வட்டித் தொகைக்காகவும், எஸ்பிவி கடன் தொகைக்கு ஈடாக 10% தொகை (விநியோகத்தின்போது முழுவதும் வரியற்ற வகையில் விநியோகம்)
- தென்னிந்தியாவில் உள்ள முதல் நிலை நகரங்களில் செயல்படும் மூன்று நிறுவனங்களைக் கையகப்படுத்த நிபந்தனையற்ற வகையில் ஒப்பந்தமிடுதல்
- நிறுவனத்தின் ஜிஆர்இஎஸ்பி மதிப்பு தற்போது 100-க்கு 86 என்ற அளவில் அதாவது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
தலிப் செகல், செயல் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் கூறியதாவது: 2024-ம் நிதி ஆண்டின் செயல்பாடு மிகவும் வலுவான ஆரம்பமாக அமைந்துள்ளது. முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டில் நுகர்வோரின் நுகர்வு அளவு வழக்கம் போல ஆண்டுதோறும் 18% வளர்ச்சியை எட்டியுள்ளது. நிறுவனத்தின் காலாண்டு நிகர வருமானம் 17% வளர்ச்சியடைந்து நிர்ணயித்த இலக்கை எட்டும் விதமாகத் தொடர்கிறது. நிறுவனத்தின் செயல்பாடு முழுமையாக தரத்தின் அடிப்படையில் ஸ்திரமான வளர்ச்சியை எட்டி வருகிறது. மிகவும் வலுவான, ஸ்திரமான செயல்பாடுகள் காரணமாக முதல் தவணையாக ரூ. 4,521மில்லியன் தொகையை ஒரு பங்கிற்கு ரூ. 2.98 வழங்குவது என்று திட்டமிட்டு 100% முழுமையாக அதாவது பட்டியலிடப்பட்ட நாளிலிருந்துவழங்க (மே 19,2023) முடிவு செய்யப்பட்டு செப்டம்பர் 30, 2023 வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களது உத்திசார் செயல்பாடுகள் காரணமாக நாங்கள் நிபந்தனைகள் ஏதுமற்ற முறையில் 3 உயர் நிறுவன தரமான மால்களை தென்னிந்தியாவில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். இதன் மூலம் தொடர்ந்து தரமான சில்லரை வர்த்தக நிறுவனமாக செயல்படுவதோடு 1,000 உள்நாடு மற்றும் வெளிநாடு மால்கள் மூலம் சிறந்த சேவையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.