முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி நடத்திய “வெற்றிக்கான இலக்கு”
முகப்பேர் கிழக்கு
வேலம்மாள் முதன்மைப் பள்ளி
10 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு 27.02.2022 நாளன்று நடைபெற்றது.
வேலம்மாள் முதன்மைப் பள்ளியில்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காகவும் அவர்தம் பெற்றோருக்காகவும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்திருந்த “ஸ்பார்க்” – கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் – ஊக்குவித்தல் கருத்தரங்கு முகப்பேர் மேற்கில் உள்ள வேலம்மாள் ஹாலில் 27.02.2022
அன்று இரு அமர்வுகளாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக
கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் திரு.அஸ்வின் அவர்கள் கலந்து கொண்டு
அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்வி மற்றும் தொழில் தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு
விளக்கம் அளிக்கும் வகையிலும்
முழுமையான கல்வி வழிகாட்டும் நெறிமுறையை வழங்கினார்.
துறை ரீதியாக உள்ள உயர்கல்வி வாய்ப்புகள்
பற்றிப் பேசிய அவர் மாணவர்கள் உயர்தரத்தில் தங்களது இலட்சியங்களை எவ்வாறு அடைவது,
எதிர்கால தொழில் சந்தைக்கு எவ்வாறு தயாராவது,
திட்டமிட்ட பாதையில் எவ்வாறு பயணிப்பது,
தமது திறன்களை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது மற்றும் பல்கலைக்கழக நுழைவை எவ்வாறு எதிர்கொள்வது எனும் கருப்பொருள் குறித்தும் சிறப்பாக உரையாற்றினார்,
மேலும் நம்மிடையே உள்ள தொழிநுட்பக் கல்வி நிறுவனங்கள்- கல்வி வாய்ப்புக்கள் பற்றியும்
தற்போதைய தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் தேடல்கள் பற்றியும் ,
பல்கலைக்கழகக் கல்விப் பாடநெறிகளும் மற்றும் மாணவர் தெரிவும் தொடர்பான மாணவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் அவர்களை ஊக்குவித்தார்.
இந்நிகழ்விற்கு
பத்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
எதிர்கால வழிகாட்டி
என்னும் இலக்கை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வு மாணவர்களின் அடுத்த கட்ட கல்விக்கும்,தொழில் வளர்ச்சிக்கும்
வாய்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒரு முழுமையான கருத்தரங்கமாக அமைந்திருந்தது என்பது பெற்றோரின் கருத்தாக அமைந்தது.