வீட்டிற்கே சென்று வாகனங்களை பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு செய்யும் சேவை தொடக்கம்

மஹிந்திரா அண்ட்மஹிந்திரா நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்கள் நலம் மற்றும் சமூக நலம் கருதி இந்த கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு மஹிந்திரா வாடிக்கையாளர்களின் வீட்டிற்க்கே சென்று வாடிக்கையாளர்களின் வாகனங்களை பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு செய்யும் வகையில் Mahindra Service on Wheels என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறைகொண்ட மஹிந்திரா நிறுவனம் வீட்டிலிருந்து பணிபுரியும் வாடிக்கையாளர்கள் வாகன பராமரிப்புக்கு பயன்படும் வகையிலும் மற்றும் தேவையற்ற சமூக மக்கள் நெருக்கத்தை தவிர்க்கும் வகையிலும் இந்தநடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது .

இந்த புதிய நடைமுறையை மஹிந்திரா & மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் ஆன ஆட்டோ மோட்டிவ் மேனு பேக்சுரர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சாலிகிராமம் பணிமனையில்  16.09.2020  மாலை  3.00 மணியளவில் ஆட்டோ மோட்டிவ் மேனு பேக்சுரர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.மணிசங்கர் மற்றும் அதன் வாகன சேவைமைய பிரிவு பொதுமேலாளர்  வைத்யநாதன் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின்சார்பாகஅதன்வாடிக்கையாளர் சேவை பிரிவு மேலாளர்  Alex ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கிவைத்தனர்.

இந்த துவக்க விழாவில் ஆட்டோ மோட்டிவ் மேனு பேக்சுரர்ஸ் பிரை வேட் லிமிட்டெட் நிறுவனத்தின் மேலாளர்.ரமேஷ் மற்றும் தொழிலாளர்கள் பங்குக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.