எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11பேர் அமெரிக்க நாட்டு நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் பணி நியமனம்-எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி பாராட்டு

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11பேர் அமெரிக்க நாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு 72,000 அமெரிக்க டாலர் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிக ஊதியத்தில் பணி நியமனம் பெற்றுள்ள மாணவ மாணவியரை எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி. வாழ்த்தும் ,பாராட்டும் தெரிவித்துள்ளார்.

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒன்றிணைந்த உடல்நலம் அறிவியல் துறையில் (Allied Health Science) பேச்சு மொழிநடை நோயியலில் முதுகலை பட்ட படிப்பு (M.Sc Speech Language Pathology) முடித்த மாணவ மாணவிகள் 11 பேர் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பிளேசடோன் பகுதியில் இயங்கி வரும் ED தியரி மருத்துவ நிறுவனத்தில் பேச்சு மொழிநடை நோயியல் நிபுணர்களாக ஆண்டுக்கு 70,000முதல் 72,000அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் ₹56 லட்சம்) என அதிக ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக சென்னை கிண்டியில் உள்ள ரமடா பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் பேசுகையில்:

நாட்டில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் ஒன்றாக சிறப்பிடம் பெற்றுள்ளது. மாணவர்களுக்கு உலக தரத்தில் கல்வி வழங்குவதுடன் சிறந்த ஆராய்ச்சியாலர்களாக , புத்தொழில் தொழில் முனைவோர்களாக உருவாக்குவத்தில் முனைப்பு காட்டி வருகிறது. அதோடு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவதில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தஆண்டு சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் சர்வதேச அளவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் நல்லா ஊதியத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அதிலும் ஒரு மாணவர் அமேசான் ஜெர்மனி நிறுவனத்தில் ஆண்டுக்கு ₹1கோடி சம்பளத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அரசால் கூட இந்த அளவிற்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாது. நாட்டில் வேலை இன்மையை போக்குவத்தில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாட்டிற்கு கல்வியில் ஆர்வமுள்ள ஒரு நல்ல பிரதமர் உள்ளார், புத்தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளார். அதன் மூலம் பல்லாயிரம் புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. அதே போன்று கொரானா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிற்கு வழிவகை செய்ததின் மூலமாக பரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளன. அப்படி இருக்கையில் 15 ஆண்டுகளே ஆனா எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது பெரிய சாதனையாகும்.
அமெரிக்கா உள்ளிட்ட உலகில் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அங்கு எஸ்ஆர்எம் முன்னாள் மாணவரை காண முடிகிறது.

இந்தாண்டு எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயின்ற பெருபான்மையான மாணவர்கள் இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் இயங்கிவரும் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்காது.

17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் 1,600 படுக்கைகளுடன் பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகளுடன் இயங்கி வருகிறது. மேலும் 24 மணி நேரமும் இயங்கும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வசதியும் உள்ளது. இதிலுள்ள ஒலி கேட்டல் மற்றும் பேச்சு மொழிநடை நோயியல் துறையில் பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கு காது கேட்கும் திறன் பற்றி மதிப்பீடு செய்தல், பேச்சு, கேட்கும் திறன் கோளாறு உள்ளிட்ட பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து புணர்வாழ்வு அளிக்கும் பணிகள் நடக்கிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் மருத்துவம் மற்றும் உடல்நலம் அறிவியல் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ. ரவிக்குமார், டீன் டாக்டர் ஏ. சுந்தரம், கூடுதல் பதிவாளர் முனைவர் டி. மைதிலி, துறைத் தலைவர் முனைவர் வி. எச். சவிதா, ஈ என் டி துறை தலைவர் முனைவர் ஜி. செல்வராஜன் ப்ளீஸ்மென்ட் அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.

Previous post <strong>EssEmm Corporation launches its new product,<br>‘COSMOS NUT BUTTER GRINDER’ a first of its kind in India</strong>
Next post SRM Med students make it big, get placed with great pay package