அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 7வது தேசிய மற்றும் மாநிலக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்புக்கான செய்தியாளர் சந்திப்பு தேசிய தலைவர் ஆ. ஹென்றி தலைமையில் நடைபெற்றது
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 7வது தேசிய மற்றும் மாநிலக் குழு பொறுப்பாளர்கள் தேர்தல் கடந்த 27 நவம்பர் 2023 அன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் தேர்வான நிர்வாகிகள் அறிவிப்புக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ. ஹென்றி தலைமையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தேசிய குழு தலைவராக டாக்டர். ஆ. ஹென்றி, பொதுச்செயலாளராக நேரு நகர் நந்து, முதன்மை செயலாளராக கிங் மேக்கர் ராஜசேகர், செயல் செயலாளரராக செந்தில் குமார், நிர்வாக செயலாளராக ஜெயச்சந்திரன், பொருளாளராக சிகரம் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இவர்களின் பெயர்கள் அறிவிப்பில் வெளியிடப்பட்டது
பின்பு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஹென்றி
தற்போது தமிழ்நாடு பதிவுத்துறை தான்தோன்றித்தனமாக செயல் படுகிறது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்கிற ஊழலின் ஊன்று கண்ணாக திகழ்கிறது அரசுக்கு பெருமளவில் வருவாயை ஈட்டி தரும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழிலை முன்னெடுக்கும் தொழில் முனைவோர்கள் ஆகிய நாங்கள் எல்லாம் சாதாரண பதிவாளர்கள் முன் பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்படுகிறோம் மக்கள் நலனில் பதிவுத்துறை துளியும் அக்கறை செலுத்துவதில்லை மாறாக நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பினை விண்ணை முட்டும் அளவிற்கு கண்ணை கட்டும் அளவிற்கு பதிவுத்துறை ஒவ்வொரு நாளும் உயர்த்தி வருகிறது
குறிப்பாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இன்று வரை பன்மடங்கு வழிகாட்டி மதிப்பினை சந்தை மதிப்பை விட கூடுதலாக உயர்த்தி இருக்கிறது தனது வாழ்நாளில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சொந்த இல்லத்தினை முதன் முதலில் புதிதாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவினை இது களைய வைக்கிறது புதிய வீட்டுமனை பிரிவிற்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணத்தை தாக்கல் செய்தால் அது குறித்து அவர் மாவட்ட பதிவாளர் பரிந்துரை செய்வதற்கு பெருமளவில் பணம் கேட்கிறார் இது சம்பந்தமாக குழுவாக சார்பதிவாளரை அணுகி நியாயம் கேட்டால் பதிவுத் துறை அமைச்சர் கேட்கின்ற பணத்தை கொடுக்கிறீர்கள் நாங்கள் கேட்கிற பணத்தை கொடுக்க மாட்டீர்களா என அதிகார தோரணையில் மிரட்டுகின்றனர்
மேலும் சார்பதிவாளரும் மாவட்ட பதிவாளரும் கேட்கிற பணத்தை கொடுக்கவில்லை எனில் 100 ரூபாய் விற்கும் சொத்திற்கு 500 ரூபாய் என வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்கிறார்கள் இது சம்பந்தமாக அமைச்சரை அணுகி குழுவாக கேட்டால் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்காக பணம் தேவைப்படுகிறது என்று நேரடியாகவே மாநில அரசுக்கு பதிவு துறையின் மூலம் வருவாய் வருவதினால் இதனை பெரும் அளவில் உயர்த்த சொல்லி மேல் இடத்துல உத்தரவு எங்களால் எதுவும் செய்ய முடியாது என கை விரிகின்றனர்
தமிழக முதல்வர் அவர்கள் தனது தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் நாளும் வளர்ச்சி கண்டு வருகிறது மக்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றன என்று நினைத்துக் கொண்டு பகல் கனவு காண்கிறார் என்றார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்