ஃபேர்பிளே இணையத்துக்கு எதிராக வயாகாம்18 நிறுவனம் தொடர்ந்த வழக்கில் முக்கிய பங்குதாரர் கைது

~ இந்த வழக்கில் ஆன்லைன் சூதாட்ட இணையதளத்தின் உரிமையாளர்கள்-நிறுவனர்களில் ஒருவரான குலாம் அப்பாஸ் முனி விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
~ கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் 2023- ஐ சட்டவிரோதமாக ஒளிபரப்பியதற்காக (ஸ்ட்ரீமிங்) பெட்டிங் இணையதளத்துக்கு எதிராக வயாகாம்18 நிறுவனம் வழக்குப் பதிவு செய்திருந்தது.

டிசம்பர் 14, 2023:

மிகப்பெரிய அளவிலான ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்த நிலையில், இடையே, பெட்டிங் (சூதாட்டம்) இணையதளமான ஃபேர்பிளேவுக்கு(‘FairPlay’) எதிராக வயாகாம் 18 சட்டப் போராட்டத்தில் இறங்கியது. ஃபேர்பிளே நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய நபரான குலாம் அப்பாஸ் முனி கைது செய்யப்பட்டதையடுத்து இந்த செய்தியை தற்போது வயாகாம்18 வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் ஒளிபரப்பின்போது ஃபேர்பிளே நிறுவனம் சட்டவிரோதமாக போட்டியை ஸ்டிரீமிங் (ஒளிபரப்பு) செய்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து வயாகாம் 18 சட்டப்படி நடவடிக்கை எடுத்ததன் மூலம் அதுதொடர்பான நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், அனில் லாலே இதுதொடர்பாக கூறியதாவது:
ஐபிஎல் -2023 போட்டியை சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்தபோது, நாங்கள் உடனடியாக தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏறக்குறைய ஒரு வருட சட்டப் போராட்டம் நீடித்த பிறகு, தற்போது குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உடனடியான சட்ட நடவடிக்கை மிகவும் முக்கியமானது. அதனால் ஏற்பட்ட சேதம் பணத்துக்கு மட்டுமல்லாமல், எங்கள் நற்பெயருக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் பொருட்டே இந்த சட்டப் போராட்டம் தொடரப்பட்டது. இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபடுவர்கள், மீறுபவர்களை வயாகாம்18 நிறுவனம் தொடர்ந்து எதிர்க்கும்.
ஐபிஎல் 2023(IPL 2023) போட்டியால் எழுந்துள்ள பரபரப்பைப் பயன்படுத்தி, ஆன்லைன் பெட்டிங் (சூதாட்டம்) தளமான ‘FairPlay’ மும்பை மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள அச்சு, டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் விளம்பரப் பலகைகளில் பொய்யாக விளம்பரம் செய்தது. கேமிங்/பெட்டிங் இணையதளத்துக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமல்லாமல், “ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இலவசமாகப் பாருங்கள், நேரலை” போன்ற டேக்லைன்களைப் பயன்படுத்தி அதை ஐபிஎல் உடன் சட்டவிரோதமாக தொடர்புபடுத்தியது ஃபேர்பிளே. இதையடுத்து, ஃபேர்பிளே(FairPlay) தளத்தில் ஐபிஎல் 2023 சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது தெரியவந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிக்கான டிஜிட்டல் உரிமைகளை 5 ஆண்டுகளுக்கு பிசிசிஐ-யிடம் இருந்து பெற்றுள்ள வயாகாம்18 (Viacom18) இந்த சட்ட மீறலுக்கு தடை உத்தரவைக் கோரி விரைவான நடவடிக்கைகளை எடுத்தது.
2023, டிசம்பர் 21-ம் தேதியில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி,
4,750 க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட இணையதளங்கள், இணைய சேவை வழங்குநர்கள் (ISPகள்), ஸ்ட்ரீமிங்/ஹோஸ்டிங்/பதிவிறக்கம்/காட்சிப்படுத்துதல்/பரிமாற்றம் செய்தல் அல்லது கிடைக்கச் செய்வதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல்லில் வயாகாம்18-ன் உரிமைகள் தொடர்பாக ஏப்ரல் 19, 2023 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் ஃபேர்பிளேவுக்கு எதிராக ஒரு தடையுத்தரவைப் பெற்றது. இதன் மூலம் ஃபேர்பிளே இணையதளத்தில் அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்/ஹோஸ்டிங்/பதிவிறக்கம்/காட்சிப்படுத்துதல்/பரிமாற்றம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், வயாகாம்18- இன் உரிமைகளை ஃபேர்பிளே மீறுவதால், வயாகாம்18 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மேலும் ஃபேர்பிளேவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
வயாகாம்18-ன் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மேற்கொண்டு, மகாராஷ்டிரா சைபர் டிஜிட்டல் கிரைம் யூனிட்டில் (MCDCU) ஃபேர்பிளே மற்றும் அதன் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களான அப்பாஸ், பென்னி மற்றும் ஜோ ஆகியோருக்கு எதிராக பதிப்புரிமை மீறல், கிரிமினல் சதி மற்றும் ஏமாற்றுதல் போன்றவற்றுக்காக புகாரை பதிவு செய்தது. இதுதவிர, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வயாகாம்18-ன் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற முழுமையான விசாரணைக்குப் பிறகு, டிசம்பர் 12, 2023 அன்று, பிரதான குற்றவாளிகளில் ஒருவரான அப்பாஸை MCDCU போலீஸார் வெற்றிகரமாகக் கைது செய்தனர். குற்றவாளி குலாம் அப்பாஸ் முனி அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த நாள் வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
தீவிரமான செயல்பாடுகள், உடனடி சட்ட நடவடிக்கைகள் மூலம் இணையத் திருட்டு, சட்டவிரோதமாக போட்டிகளை ஒளிபரப்பு செய்தல் போன்ற இணையத் திருட்டுகளை வயாகாம்18 நிறுவனம், சட்டப்பூர்வமாக அணுகி வெற்றி கண்டுள்ளது.

Previous post Landmark Achievement: Pioneering Total Knee Replacement Surgery in Tamil Nadu Revolutionizes with Augmented Reality Technology
Next post Prashanth Hospitals revolutionizes Joint Replacement marking a ‘Century of Success’ using the 4th Generation Robot