நுங்கம்பாக்கம்: உலகத்தில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட் 1-2-1 சார்பில் E5 365 என்கிற திட்டத்தின் மூலம் பீமா மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பசுமையை வளருங்கள் அமைப்பின் இயக்குனர் முனைவர் பாரதி அவர்கள்சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
டிரஸ்ட் 1-2-1 அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் பசுமை நாயகன் உமாநாத் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் லயோலா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், டிரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய பசுமையை வளருங்கள் அமைப்பின் இயக்குனர் முனைவர் பாரதி…
கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் பற்றிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகவும், இதனிடையே கடந்த 15 ஆண்டுகளாக பீமா மூங்கில் மரங்கள் தொடர்பான ஆராய்ச்சியை செய்ததாகவும் பீமா மூங்கில் மரம் அனைத்து வகையான மரங்களை விடவும் அதிகப்படியான கரியமில வாயு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற காற்றில் உள்ள நச்சுக்களை அதிகப்படியாக உறிஞ்ச கூடியதாக இருக்கிறது.
எனவே தான் தனது ஆராய்ச்சியை இந்தியா மற்றும் உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம் பல்வேறு இடங்களில் பீமா மூங்கில் மர கன்றுகள் நடப்பட்டு கொண்டிருக்கிறது அதன் முன்னோடியாக இன்று லயோலா கல்லூரியில் பீமா மூங்கில் மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வின் நோக்கம் 100 கோடி பீமா மூங்கில் மர கன்றுகளை நட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தங்களது நர்சரியில் மூங்கில் கன்றுகள் வளர்க்கப்பட்டு, வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பீமா மூங்கில் மரம் என்பது ஒரு நாளைக்கு 1.5 அடி உயரம் வளரக்கூடியது. சென்னை போன்ற மாநகரங்களில் கூவம் நதி கரையோரம் பீமா மூங்கில் மரங்களை நடும்போது கூவம் ஆற்றில் உள்ள துர்நாற்றம், தேவையற்ற நச்சுக்களை உள்வாங்கக் கூடியதாக பீமா மூங்கில் கன்றுகள் இருக்கும்.
பீமா மூங்கில் மரம் என்பது இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய மரமாக உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
எனவே பீமா மூங்கில் மர கன்றுகளை வளர்ப்பதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.