சென்னையை அடுத்த படப்பை பனப்பாக்கத்தில் ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டுமனை பிரிவு விற்பனை துவக்கம்

ஹரிணி புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்
75 வது திட்டமாக சென்னையை அடுத்த படப்பை – பனப்பாக்கத்தில் “ஸ்ரீ சாய் கார்டன்” DTCP – RERA அங்கீகாரம் பெற்ற
வீட்டுமனை பிரிவு மற்றும் தனி வீடுகள் குடியிருப்புகள் திட்டம் மேளதாளங்கள் முழங்க பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தினை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைபின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி
எம். புகழேந்தி,
முன்னாள் குடியரசு தலைவர் அய்யா ஏபிஜே. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி டாக்டர் V.பொன்ராஜ் ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.

ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் கோ.ரமேஷ் அவர்கள் பேசுகையில், இந்த நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளில் சுமார் 10,000 வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று அவர்களின் இல்ல கனவுகளை நினைவாக்கித் தந்து, வெற்றிகரமாக 20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் சாதாரண சாமானிய மக்களும் தங்களின் இல்லக் கனவுகளை நினைவாக்கிக் கொள்ளும் வகையில், டிடிசிபி மற்றும் ரேரா அங்கீகாரம் பெற்ற சுமார் 325 வீட்டுமனைகள் இத்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சுற்றுச்சுவரும், தரமான தார் சாலைகளும், சோலார் மின் விளக்குகளும், உடனடி மின் இணைப்பு வசதியும், நல்ல குடிநீர் வசதியும், சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களும் நடப்பட்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் மனைகள் ரூபாய் ₹. 5.லட்சம் முதலும், தனி வீடுகள் ரூபாய் ₹.9 லட்சம் முதலும் விற்பனைக்கு துவக்கியுள்ளது. 80% சதவீதம் வரை வங்கிக் கடனும் பெற்று தருகிறது எனவும் தெரிவித்தார்.

ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் நோக்கம் எல்லா மனிதர்களும் தங்களின் இல்லக் கனவுகளை நினைவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில், இந்த ஸ்ரீ சாய் கார்டன் வீட்டுமனை பிரிவில் முதலில் வீடு கட்டகூடிய 50 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பத்தாயிரம் 10,000 செங்கல் மற்றும் 100 நூறு மூட்டை சிமெண்ட் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற திட்டத்தையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் துவக்க விழா சலுகையாக முன்பதிவு செய்த அனைவருக்கும் 4 கிராம் தங்க காயின் அன்பளிப்பாக வழங்கபட்டது.

முன்னாள் ஜனாதிபதி அய்யா ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமான “புரா திட்டம்” சுமார்ட் வில்லேஜ் திட்டம் இந்த வீட்டுமனை பிரிவில் விஞ்ஞானி V.பொன்ராஜ் அவர்களின் ஆலோசனையின்படி செயல்படுத்தபடும் எனவும், ஸ்மார்ட் ஹோம் வித் ஸ்மார்ட் ஃபார்ம் என்ற திட்டம் இங்கு உருவாக்கும் போது, இவர்களின் மாத தவணை தொகையை இந்த திட்டத்தின் மூலம் இவர்களே கட்டும் அளவுக்கு வருமானம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது.

இந்த வீட்டுமனைக்கு அருகாமையில் எண்ணற்ற பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க், நகைக்கடை, துணிக்கடை, ஹோட்டல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும், வேலைவாய்ப்புக்கு ஏதுவான தொழிற்பேட்டை, தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலமும், புது போக்குவரத்துக்கு ஏதுவாக 200 அடி சாலை, 400 அடி சாலை, எட்டு வழி சாலை, ஆறு வழி சாலை, நான்கு வழி சாலை, ரெயில் நிலையம், வண்டலூர் புறநகர் பேருந்து நிலையம், விமான நிலையம் என அனைத்தும் அருகில் அமைந்துள்ளது.

மேலும் கோயம்பேடு மொத்த காய்கறிகள் உள்ளிட்ட விற்பனை வணிக வளாகம் அருகில் வர உள்ளது.

நிகழ்ச்சியின் இறுதியில் ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் ஆர்க்கிடெக் பாலாஜி ரமேஷ் அவர்கள், ஸ்ரீ சாய் கார்டன் வீட்டுமனை பிரிவு துவக்க விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, அனைவரின் ஒத்துழைப்பும் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார்.

இந்நிகழ்ச்சியை திருமதி.மோகனா செல்வி.கிரிஜா ஆகியோர்கள் தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் திரு.கருணாநிதி, ஹெச்டிஎஃப்சி வங்கி டிஜிஎம், இந்தியன் வங்கி டிஜிஎம், டாட்டா கேப்பிட்டல் ஹவுசிங் லிமிடெட் டிஜிஎம், ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருமதி.லட்சுமி ஹரிணி, பாஸ்கர், ரவி, பாலகிருஷ்ணன், மதியழகன், செந்தில், உதயகுமார், மேரி, ஆர்த்தி, மணிகண்டன் உள்ளிட்டவர்களும், பனப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், நிலத்தின் உரிமையாளர்கள் பாலாஜி, சுதா, ஸ்டில் குணா, ஃபெயிரா கூட்டமைப்பை சார்ந்த தமிழரசன், உதயகுமார், கார்த்திக், சிவகுமரன், ஹரிகிருஷ்ணன், கண்ணன், முத்து, சுந்தரபாண்டியன், ஸ்ரீகாந்த் மற்றும் வாடிக்கையாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் விருந்து பரிமாறப்பட்டது.

Dynasty of Dragons Previous post Embark on an epic adventure with ‘The Dynasty of Dragons’ at Nexus Vijaya Mall
Next post Meta Kalvi, Tamil Nadu’s First Virtual Reality Lab for Education, Launched on Metaverse for Government Schools, Chennai