காமன்வெல்த் இளைஞர் பேரவை மற்றும் மாணவர் சங்கமும், K12 டெக்னோ சர்வீசஸ் மற்றும் GUSD (நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவிய புரிந்துணர்வு) இணைந்து அறிமுகம் செய்யும் உலகளாவிய STEM போட்டியான “மெக்கத்லான் 2024”

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான போட்டி, இந்தியாவில் உள்ள 6 முக்கிய நகரங்களிலும், உலகளவில் 9 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நடைபெறும்.

இந்தப் போட்டியானது ஆராய்ச்சி செய்வதற்கும், உருவாக்குவதற்கும், கண்டுபிடிப்பதற்கும் இளைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

மெக்கத்லான் 2024 போட்டியானது, STEM செயல்திட்டங்களின் மூலம் யதார்த்த உலகில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஆழ்ந்த சிந்தனை, குழுப்பணி மற்றும் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஆற்றலை மாணவர்களுக்கு வழங்குகிறது.

சென்னை (ஆகஸ்ட் 12, 2024): தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்த உலகத்தில், K12 டெக்னோ சர்வீசஸ் (ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் கல்விச் சேவை வழங்குநர்) நிறுவனமானது காமன்வெல்த் இளைஞர் பேரவை, காமன்வெல்த் மாணவர் சங்கம் மற்றும் GUSD (நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவிய புரிந்துணர்வு) ஆகியவற்றுடன் இணைந்து, 8 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மத்தியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மீதான ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச நிகழ்ச்சியான ‘மெக்கத்லான் 2024’ -இன் அறிமுகம் குறித்து அறிவிப்பதில் பெருமையடைகிறது.

இது 8 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மத்தியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சர்வதேச நிகழ்ச்சியாகும்.

மும்பை, ஹைதராபாத், சென்னை, குருகிராம், புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த STEM ஃபெஸ்ட்-மெக்கத்லான் போட்டி நடைபெறும்.இந்தப் போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, இலங்கை, UAE, நேபாளம், பூடான் உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பார்கள். உலகளவில் நடைபெறுவதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைப்பது உறுதியாகிறது.இந்த ஆகஸ்ட் முதல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அரையிறுதிச் சுற்றுகள் ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து 2024 ஆண்டு நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறும்.மெகத்லான் 2024, பல்வேறு முக்கியக் காரணங்களுக்காக இந்திய K-12 தளத்தில் ஒரு தனித்துவமான போட்டியாக விளங்குகிறது.உலகளவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த நிகழ்ச்சியானது, இந்தப் பகுதியில் உள்ள மற்ற போட்டிகளிலிருந்து தனித்துவமாக நிற்கிறது. இந்தப் போட்டி, STEM செயல்திட்டங்களின் மூலம் யதார்த்த உலகில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கருவிகளையும், வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு ஆற்றல் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பங்கேற்பாளர்கள் தங்கள் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆழ்ந்த சிந்தனை, குழுப்பணி மற்றும் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான திறன்களையும் கற்றுக் கொள்வார்கள்.காமன்வெல்த் மாணவர்கள் சங்கத்தின் ஆசிய பிராந்திய சிறப்பு ஆலோசகரும், அடாசியஸ் ட்ரீம்ஸ் பவுண்டேஷனின் ஊக்குவிப்பாளர் மற்றும் நிர்வாக இயக்குனருமான தினேஷ் கஜேந்திரன் அவர்கள் கூறும் போது, “K12 டெக்னோ சர்வீசஸ் உடன் இணைந்து இந்த மிகப்பெரிய உலகளாவிய STEM ஃபெஸ்ட்-மெக்கத்லான் போட்டியை நடத்துவதில் காமன்வெல்த் இளைஞர் பேரவை மற்றும் மாணவர் சங்கம் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த உலகளாவிய STEM போட்டியானது காமன்வெல்த் நாடுகள் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஆற்றல் வழங்கும் எங்கள் குறிக்கோளை அடைவதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. அறிவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் மூலம் சவால்களைத் தீர்ப்பதற்காக பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மெகத்லான் 2024 போட்டியானது, நமது எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கப் போகும் சர்வதேச ஒத்துழைப்பையும், திறன் மேம்பாட்டையும் அதிகரிக்கும். இந்த நிகழ்ச்சியின் மூலம் அடுத்த தலைமுறை STEM தலைவர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் தொழில்நுட்பம் மூலம் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான நட்புறவும் வலுப்படும் என நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

K12 டெக்னோ சர்வீசஸின் S.T.E.M துறைத் தலைவரான ஜிம்மி அஹுஜா, கூறியதாவது: “மெக்கத்லான் 2024 STEM கல்வியில் ஒரு புதுமையான முன்னெடுப்பைக் குறிக்கிறது, உலககெங்கும் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைக்கிறது. மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் அம்சங்களை நிரூபிக்கவும் பயன்படுத்தவும், பங்கேற்பாளர்களின் வடிவமைப்புத் திறன்கள் மற்றும் அறிவியல் நடைமுறைகளின் பயன்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் பல்வேறு போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கே K12 டெக்னோ சர்வீசஸில் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்தையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது, மாணவர்களுக்கு புதுமையான நேரடிக் கற்றலையும் வழங்குகிறது”

ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளியின் ஆர்க்கிட்ஸ் கேரியர் ஃபவுண்டேஷன் திட்டத்தின் (OCFP) தலைவரான ஷ்லோக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: “ஆர்க்கிட்ஸில், STEM ஐ முன்கூட்டியே வெளிப்படுத்துகின்ற, மாணவர்களின் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் அறிவை ஊக்குவித்து, வளர்க்கின்ற ஒரு பிரத்தியேகமான OCFP பாடத்திட்டம் எங்களிடம் உள்ளது. மேலும், எங்களின் தற்போதைய STEM வேலைத்திட்டங்கள், நவீன வேலைவாய்ப்புச் சந்தைகளுக்குத் தேவையான முக்கியமான திறன்களைக் கொண்ட மாணவர்களைத் தயார் செய்து, நடைமுறையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தப் பங்கேற்பாளர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மாணவர்களிடம் அறிவியல் மனோபாவத்தை வளர்ப்பதற்கும், ஆழ்ந்த மதிப்பீடு, கவனம் மற்றும் திறன்களை வளர்ப்பதற்கும் தொடர்ந்து நாங்கள் முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் ஒரு சாதனையாளர் தான் என்று நாங்கள் நம்புகிறோம், மெக்கத்லான் 2024 மூலம் இந்த இளைஞர்களின் அறிவுத்திறன், படைப்பாற்றல் மற்றும் அறிவின் மீதான இடைவிடாத ஆர்வத்தைக் கொண்டாடுவதையும், அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

மெக்கத்லான் 2024 பல்வேறு வயதுக் குழுக்களுக்கு, அவர்களது ஆர்வங்களைப் பூர்த்தி செய்யும் பல்வேறு அற்புதமான போட்டிகளை வழங்கும், அவற்றில் சில:
நிகழ்ச்சிகள் நாட்கள் தகுதி அணியின் அளவு
ஈகோ இன்னோவா அறிவியல் கண்காட்சி – உலகளவில் உள்ள சவால்களைத் தீர்ப்பதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகளை நிரூபிக்கும், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகளைப் பூர்த்தி செய்யும் மாடல்களை அணிகள் உருவாக்கும். 1 மற்றும் 2 டெவலப்பர்கள்: வயது (8-11)
கண்டுபிடிப்பாளர்கள்: வயது (11-14)
முன்னோடிகள்: வயது (14 – 18) ஒரே வயதுப் பிரிவைச் சேர்ந்த 1 முதல் 3 உறுப்பினர்கள்
பிரைனியாக் வினாடி வினா யுத்தம் – அறிவியல் கருத்தாக்கங்கள், நடப்பு விவகாரங்கள் மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகள் பற்றிய பங்கேற்பாளர்களின் அறிவை சோதிக்கும் ஒரு அறிவார்ந்த தூண்டுதல் போட்டி. 1 மற்றும் 2 டெவலப்பர்கள்: வயது (8-11)
கண்டுபிடிப்பாளர்கள்: வயது (11-14)
முன்னோடிகள்: வயது (14 – 18) 2 students per team
வேகமான வரிசை பின்தொடர்தல் ரோபோ – சிக்கலான தடங்களில் வேகம் மற்றும் துல்லியத்துடன் செல்வதற்கு தானியங்கி ரோபோக்களை மாணவர்கள் புரோகிராம் செய்வார்கள். 1 and 2 கண்டுபிடிப்பாளர்கள்: வயது (11-14)
முன்னோடிகள்: வயது (14 – 18) 1 to 5 members
ரேசர் ரோபோ – தனிப்பயனாக்கப்பட்ட ரோபோக்கள் தடைகளைத் தாண்டி, சவாலான விஷயங்களைக் கற்றுக் கொள்ளும், அட்ரினலினை அதிகரிக்கும் பந்தயம். 1 and 2 கண்டுபிடிப்பாளர்கள்: வயது (11-14)
முன்னோடிகள்: வயது (14 – 18) 1 to 5 members
தடைகளைத் தவிர்ப்பதுடன் வரிசையைப் பின்பற்றும் ரோபோ – தடைகளைத் தவிர்க்கும் திறன்களுடன் துல்லியமாகத் தொடர்ந்து வரிசையைப் பின்பற்றும் நவீன ரோபாட்டிக்ஸ் சவால்,.
1 டெவலப்பர்கள்: வயது (8-11)
கண்டுபிடிப்பாளர்கள்: வயது (11-14)
முன்னோடிகள்: வயது (14 – 18) 1 to 5 members

மெக்கத்லான் 2024 என்பது வெறும் போட்டியை விட அதிக விஷயங்களைக் கொண்டதாகும்; STEM – அறிவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் மீதான ஆர்வத்தை ஆராயவும், மதிப்புவாய்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளவும், இளம் கண்டுபிடிப்பாளர்களின் உலகளாவிய சமூகத்துடன் இணையவும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். மாணவர்கள் www.mekathlon.com மூலம் பதிவு செய்யலாம் அல்லது போட்டியைப் பற்றி மேலும் அறியலாம்.

ஊடகத் தொடர்பு:
ஜெயஸ்ரீ குமார்
jayshree.kumar@orchids.edu.in/ 9769286661
கரேன் ஜெருஷா
karenjerusha@orchids.edu.in/ 9206493340

Previous post Ladies Circle India Donates Midray Single Para Monitor to Masonic Medical Centre for Children
Next post 82 years old woman walks again, after Successful Revision Total Replacement Surgery at Sivam Hospital