காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை-

மருத்துவமனை தலைவர் டாக்டர் பா.சத்தியநாராயணன் பாராட்டு

வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஏற்படும் இதய துடிப்பால், பலமுறை சுய நினைவு இன்றி பாதிப்புக்கு உள்ளான 82 வயது முதியவருக்கு,காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் குளோபல் மருத்துவமனையில் மருத்துவர்கள் இதய துடிப்பை சீர் செய்யும் 3 செ.மீ.அளவிலான நவீன கருவியினை சிறிய அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை நிகழ்த்திய மருத்துவர்களை எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை தலைவர் டாக்டர் பா.சத்தியநாராயணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நவீன சிகிச்சை முறை பற்றி எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை தலைவர் பா.சத்தியநாராயணன் கூறியதாவது :

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி என்ற பெயருடைய 82 வயதுடிய முதியவர் ஒருவர் சுய நினைவின்றி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆகும். இவருக்கு அடிக்கடி இதுபோல சுய நினைவு இழப்பு ஏற்படுவதாகவும்,கடந்த 2 மாதத்திற்கும் மேலாக இந்த நிலை இருந்து இதற்கு மன்னிவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் இல்லாத நிலையில் இங்கு அனுமதிக்கபட்டார்.

அதனை தொடர்ந்து நோயாளி ராஜாமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதய துடிப்பு அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர். இதன் காரணமாக ஏற்படும் அதிக பட படப்பு காரணமாக நோயாளிக்கு நினைவு இழப்பு ஏற்படுவதை கண்டறிந்தனர்.அதனை சீர்செய்யும் வகையில் சிகிச்சை மேற்கொண்டனர், நோயாளி ராஜாமணின் உடலில் நெஞ்சு மேல்பகுதியின் இடது தோல்பட்டையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்து நெஞ்சு மேல்பகுதியின் உட்புறத்தில் சிறிய அளவிலான நவீன மின் கருவி ஒன்றை பொருத்தினர். அதன் மூலம் நோயாளியின் இதய துடிப்பு சீர் செய்யப்பட்டு சகஜ நிலைக்கு கொண்டுவரப்பட்டு குணமடைந்தார்.82 வயதுக்கு மேல் வயதுடைய ஒருவருக்கு இந்த முறை அறுவை சிகிச்சை செய்ய பட்டது முதன் முதலில் இம்மருத்துவமனையில் தான் இதற்காக மருத்துவர்களை பாராட்டினார்.

எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் டாக்டர் வி.பி.சந்திரசேகரன் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை பிரிவு 2 தலைவர் டாக்டர் சி. மூர்த்தி தலைமையில் டாக்டர் வி. ஸ்ரீராம் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு நோயாளி ராஜாமணியை குணப்படுத்தினர்.

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் சி. மூர்த்தி கூறுகையில்

மனிதனின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 70 வரைதான் இருக்க வேண்டும், ராஜாமணியை சோதித்தபோது அவரது இதய துடிப்பு 180,200 என்ற அளவில் இருந்தது,இது இதயத்தின் மிகை மின் ஆற்றல்(Electrical Strom) மூலம் ஏற்படுவது, இதற்கு இயற்கையை மீறிய இதய துடிப்பு என்று (VT Ventricular Tachycardia)அழைக்கப்படும். இந்த அளவில் இருந்தால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே இதயம் சார்ந்த படபடப்பு நீக்குவதற்கான உட்புற கருவி(ICD Implantable Cardiac Defibrillator)என்ற மின் கருவி பொருத்தி இதய துடிப்பை சீர் செய்யும் பணியை மேற்கொண்டோம்.

ராஜாமணியின் உடலில் அந்த கருவியை பொறுத்துவதற்கு அவரது உடலின் உடலில் நெஞ்சு மேல்பகுதியின் இடது தோல்பட்டையில் லோக்கல் அனஸ்திசியா வழங்கப்பட்டு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இடது தோல்பட்டையின் உட்புறத்தில் 3 செ.மீ.அளவிலான சிறிய அளவிலான பேட்டரியுடன் கூடிய நவீன மின் கருவி ஒன்றை பொருத்தப்பட்டு மேல்புரத்தில் தையலிடப்பட்டது.சுமார் 10 ஆண்டுகள் வரை இயங்கும் தன்மை உடையது அந்த பேட்டரி. அந்த கருவி இதய துடிப்பை சீற்செய்து 200 அளவிற்கு ஏற்படுவதையும் அதன் மூலம் ஏற்படும் பட படப்பை தடுத்து நோயாளியை காப்பாற்றும் என்றார்.

4 நாட்களுக்கு பின் சிகிச்சை செய்யப்பட்ட ராஜாமணியின் உடலில் போடப்பட்ட தையல் அகற்றப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார். 82 வயதுக்கு மேல் வயதுடைய ஒருவருக்கு இந்த முறை அறுவை சிகிச்சை செய்ய பட்டது முதன் முதலில் இம்மருத்துவமனையில் தான் என்று அவர் கூறினார்.

Previous post SRM Public School Sports Day Celebrations Guduvancheri, July 21- 2023
Next post Madras on Music 2023 Unveils Chennai’s Biggest 2-day Global Indie Alt Music Festival