இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிப்பு!
அடையாறு: ஜே. கே. குழுமம் சார்பில் அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைப்பெற்ற ஜே. கே. ரியல் ஹீரோ அவார்ட்ஸ் நிகழ்வில் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான விருதாளர் பற்றிய ஓர் பார்வை:
A. J. ஹரிஹரன்( வயது 54)
செயலாளர்_ ICWO -இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனம்.
BA பொருளாதாரம் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவில் உள்ள தலைச்சிறந்த ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சுகாதாரம் மற்றும் மனித உரிமை படிப்பு பயின்றவர்.
ICWO நிறுவனத்தை 1994 ல் தொடங்கியவர்
இன்றுவரை பல்வேறு சமுக பணிகளை மிகவும் சிறந்த வகையில் கடந்த 28 ஆண்டுகளாக செய்துவருகிறார்.
அவர் செய்த பணிகளில் முக்கியமானவை:
✓✓ லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
✓✓ சென்னை மாநகரத்தின் 7 மயான பூமிகளை மேம்படுத்தியது.
✓✓ வாடகை தாய்மார்களின் மனித உரிமைகளை மேம்படுத்தியது.
✓✓ ஹரிஹரன் அவர்கள் வீடற்ற சாலையோர வாழ் முதியோருக்கான காப்பகத்தை கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் நடத்தி வருகிறார்.
✓✓ இவர் தமிழகத்தில் 97 கல்லூரிகளில் AHTC கிளப் அமைத்து மனித கடத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
திரு. ஹரிஹரன் அவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக 600 எழை எளிய மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை செய்து வருகிறார்.
இவர் பல்வேறு விருதுகளை பெற்றதோடு மலேசியா, தென்ஆப்ரிக்கா ,கொரியா , தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல மாநாடுகளில் கலந்து கொண்டு சமுக பணி பற்றி பல விழிப்புணர்வு திட்டங்கள் பற்றியும் பேசியுள்ளார்.