
ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!
அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு ஆண்டு பொதுக்குழு கூட்டம் இச்சங்கத்தின் தலைவர் டி.வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குடியிருப்பு வளாகத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இச் சங்கத்தின் செயலாளர் எஸ். பத்மநாபன் அவர்கள் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார்.
இச்சங்கத்தின் மூத்த சங்க உறுப்பினரான சுரேஷ் மேத்யூ அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சங்க பொருளாளர் அண்ணாதுரை அவர்கள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார்.
மேலும் இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கடந்த 29 ஆண்டுகளாக பல முக்கிய மூத்த தலைவர்கள் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பான ஆலோசனைகள் வழங்கி முக்கிய முடிவுகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் குடியிருப்பு வாசிகளின் வீட்டின் புனரமைப்பு குறித்தும்,பொது பராமரிப்பு தொகையை உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் முக்கிய நிகழ்வாக தேர்தல் நிலைக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் அவர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார்.
மேலும் இந்த ஆண்டின் சங்கத்தலைவராக எஸ். பத்மநாபன், செயலாளராக டி. வி.ராதாகிருஷ்ணன், பொருளாளராக வி.எம்.சுப்பிரமணியன்,
துணைப் பொருளாலராக ஆர்.ரவி நடராஜன் மற்றும் துணைத் தலைவர்களாக மேஜர் லத்தீஃபா பானு,எஸ்.பன்னீர் செல்வம்,ராஜேந்திரகுமார் சர்மா, கே.சசிகுமார், இணைச்செயலாளர்களாக கே.இ.சுப்பிரமணியன், கே.ரவிசந்தர், சுரேஷ் மேத்யூ, ராமர் செயற்குழு உறுப்பினர்களாக கணபதி,பி.ஸீதரன்,வீர மஹா லெட்சுமி,பி.சங்கர் கணேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்க பட்டனர்.
இறுதியில் சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
மேலும் இந்நிகழ்வில் மூத்த சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்க அலுவலக ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.