தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்!
தாம்பரம்: தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்த கோரியும் கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்
தாம்பரம் ஈ.பி.எஃப் அலுவலகம் முன்பு சென்னை மண்டல தலைவர் வி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் எஸ். சேரன், மண்டல தலைவர் எஸ்.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மண்டல செயலாளர் ஆர். கிருஷ்ண மூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் இந்த அறவழிப் போராட்டத்தில் EPS-95 அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவவர் கே.கனகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு விளக்க உரையாற்றினார்.
மேலும் இதில் கலந்துக்கொண்ட நிர்வாகிகளான பி.பன்னீர் செல்வம், சுந்தரம், விஜயகுமார், எம். நந்தகோபால் முத்துகுமார சாமி, சண்முகவேல், வேணுகோபால் சிதம்பரம் உள்ளிட்டோர் விளக்க உரை ஆற்றினர்
இறுதியில் சென்னை மண்டல பொருளாளர் சி. கோதண்டராமன் நன்றியுரை நல்கினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கைகளான
ஓய்வூதியர்களின் நீண்ட கால கோரிக்கைகளான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000/- பஞ்சப்படியுடன் வழங்க வேண்டியும், அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டியும், பறிக்கப்பட்ட அனைத்து ஓய்வூதிய பலன்களையும் உடனே வழங்க வேண்டியும், தொழிற்சங்க சட்ட உரிமைகளை பறிக்க கூடாது எனவும், பலன் தரும் வகையில் உச்ச நீதிமன்ற உத்திரவினை உடனே அமல்படுத்த வேண்டியும்
அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.