
அய்யா Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வணிகவியல் துறையின் சார்பாக “எட்டாவது வள்ளல் மாண்புமிகு நிறுவன வேந்தர் டாக்டர் A.C.S ஐயா” என்ற தலைப்பில் கவியரங்கம்

சென்னை, 25 செப்டம்பர் 2022: மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர், மக்கள் சேவகர், கல்வி வள்ளல், அய்யா Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வணிகவியல் துறையின் சார்பாக 23.9.2022, வெள்ளி அன்று மதியம் 2.00 மணி அளவில் “எட்டாவது வள்ளல் மாண்புமிகு நிறுவன வேந்தர் டாக்டர் A.C.S ஐயா” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
இந்த கவியரங்கத்திற்கு வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள் தலைமை வகித்தார்கள்.இதில் பேராசிரியர்கள் Dr.சு.சதீஷ்குமார், Dr.S.மாதவன் மற்றும் மாணவர்கள் கவிதை வாசித்தார்கள். நிகழ்வுகளை பேராசிரியைகள் அமுதா,மகாலட்சுமி, Deputy Dean கீதாலட்சுமி, B.சுகிதா,பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
மேலும் 500 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாலை 4 மணி அளவில் வணிகவியல் துறை சார்பாக மதுரவாயலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, அரசு அங்கன்வாடி மையம் மற்றும் சக்தி ஆதரவு இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்,எழுது பொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்.








இதற்கு பல்கலைக்கழகத்தின் தலைவர் Er.A.C.S.அருண்குமார் அவர்கள், Vice Chancellor Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேலு அவர்கள் மற்றும் கூடுதல் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள் ஆகியோர் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டனர்.
முன்னதாக மாணவர்களுக்கு தமிழில் பேச்சு & கவிதை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.






