எஸ்.ஆர்.எம் கல்லூரியில் வாழ்க்கை செயல்பாட்டில் இணக்கம் வேண்டும் என்ற தலைப்பில் மாரத்தாண் ஓட்டப்பந்தையம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக வளாகத்தில் ஒரு தேசிய அளவிளான தொழில்நுட்ப மேலாண்மை விழாவையொட்டி ஆரூஷ் 23 நடத்தும் வாழ்க்கை செயல்பாட்டில் இணக்கம் வேண்டும் என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது.

இதில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை விளையாட்டு துறையில் முன்னேற்றத்தை கொண்டு சென்று பிரதிநிதித்திய கோவ்வுரி சுதேஷ்னா ரெட்டி கலந்து கொண்டு இந்த மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் மாரத்தான் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. ரத்தினம் மற்றும் ஆரூஷ் குழுவர் உடனிருந்தார். இந்த மாரத்தான் டெக் பார்க் அவன்யூ பகுதியில் இருந்து துவங்கி கல்லூரி வளாகத்தை சுற்றி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிறைவு வடைந்தது.

இந்த ஓட்டபந்தயத்தில் எஸ்.ஆர்.ஏம் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சுமார் 5ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கோப்பிகண்ணா, கெஸ்வின், மனஸ், வன்ஷாஜ், ஆகாஷ், ஆகிய ஐந்து மாணவர்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர்.

Previous post HCAI கார் கண்காட்சி நிகழ்வில்அரிதான, பழங்கால கார்களை காண குவிந்த மக்கள்
Next post 66TH BUCK MEMORIAL SPORTS FESTIVAL 2023 at YMCA College of Physical Education