எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியின் 6ஆவது ஆண்டு விழா
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் உள்ள டி.பி.கணேசன் ஆடிடோரியத்தில் எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியின் 6ஆவது ஆண்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக லண்டன் மாநகராட்சியின் வின்ட்ரி வார்டு நகரம் பொது கவுன்சிலர் ரெஹானா அமீர், கௌரவ விருந்தினராக சென்னையின் சுற்றுச்சூழல் அறக்கட்டளை பல்கலைக்கழகத்தின் சூழலியலாளர் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுல்தாஸ்ன் அகமது இஸ்மாயில், பள்ளி தலைவர் டாக்டர். பி.சத்தியநாராயணன், பள்ளி இயக்குனர் திருமதி. மணிமங்கை சத்தியநாராயணன், பள்ளி திரு. எம்.சுப்பிரமணியன், பள்ளி ஆலோசகர் டாக்டர்.கே.ஆர் மாலதி, பள்ளி முதல்வர் திருமதி. எஸ்.புவனேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளி மாணவர்கள் கடவுள் வாழ்த்து பாடல் பாடினர். எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் அங்கமாக திகழும் பப்ளிக் பள்ளியின் அனைத்து வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டுகளை கற்பிக்கும் செயல்முறைகள் குறித்து காணொலி வெளியிடபட்டது.
மேலும் எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியின் வடிவமைப்பில் இந்தியாவில் 7வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்தாக அந்த காணொலியில் குறிப்பிடபட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை கொளரவிக்கும் விதமாக லண்டன் மாநகராட்சியின் வின்ட்ரி வார்டு நகரம் பொது கவுன்சிலர் ரெஹானா அமீர், அவர்களுக்கு பள்ளி இயக்குனர் திருமதி. மணிமங்கை சத்தியநாராயணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சென்னையின் சுற்றுச்சூழல் அறக்கட்டளை பல்கலைக்கழகத்தின் சூழலியலாளர் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுல்தாஸ்ன் அகமது இஸ்மாயில் அவர்களுக்கு பள்ளி தலைவர் டாக்டர். பி.சத்தியநாராயணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியில் கடந்த ஐந்தாண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து நிகழ்சியில் பள்ளி தலைவர் டாக்டர். பி.சத்தியநாராயணன் பேசுகையில்; பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளது. எனது தந்தை இந்த கல்வி நிருவனத்தை வளர்க்க வேறாக இருந்தார். நமது பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் திறமையானவர்களாகவும், நம்பிக்கை தன்மை உடையவர்களாகவும் வளர்த்து வருகின்றனர். இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கௌரவ விருந்தினராக சென்னையின் சுற்றுச்சூழல் அறக்கட்டளை பல்கலைக்கழகத்தின் சூழலியலாளர் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுல்தாஸ்ன் அகமது இஸ்மாயில் பேசுகையில்: காற்று, தண்ணீர் இல்லை என்றால் எந்த உலகமும் இயங்காது, மாணவர்களின் மதிபெண்களை வைத்துமட்டுமே மாணவர்களின் திறமையை முடிவு செய்யாதீர்கள், எல்லா மாணவ்ர்களாலும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது. மாணவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் திறமையாளர்களாக மாறுவார்கள். பெற்றோர்கள் நீங்கள் மாணவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தினமும் மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள், மதிபெண்யை வைத்து மாண்வர்களின் திறமையை வெளிபடுத்த முடியாது, அனைத்து கலைகளிலும் மாணவர்களுக்கு திறமை உள்ளது. செயற்கை நுண்ணற்றலில் மனிதர்கள் முடங்கி விடாதீர்கள், மனித நுன்னிறலில் இருங்கள் என கூறி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
லண்டன் மாநகராட்சியின் வின்ட்ரி வார்டு நகரம் பொது கவுன்சிலர் ரெஹானா அமீர் பேசுகையில்: இப்பள்ளியின் மாணவர்களை பார்க்கும் போது திறமையாகவும், அறிவு புர்வமாகவும் உள்ளனர். நல்ல மனநிலையை உறுவாக்குவது பள்ளி பருவத்தில் இருந்து துவங்குகிறது. நல்ல மன நிலையை உறுவாக்க தினமும் நாம் தியாங்கள், யோகசங்கள் செய்ய வேண்டும், மாணவர்கள் தினமும் நல்ல புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும், சமூக வளைய தளங்களில் உள்ள கதைகளையும், தலைவர்களின் வரலாறுகளையும் படியுங்கள், சூழ்நிலைகளை நாம் புரிந்து கொண்டால் நல்ல மன நிலை உறுவாகும், தினமும் உங்களை உற்சாகவைத்து கொண்டால் மன நிலை சிறப்பாக இருக்கும். என கூறினார். நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் 2ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ்ர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.