விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் (Switch2Sports) என்ற தளம் இயங்கி வருகிறது
இந்தியாவில் விளையாட்டுக்கு என தனித்துவமான வரலாறு இருந்தாலும் விளையாட்டை சரியாக கொண்டு செல்லும் நடைமுறையில் சில சிக்கல் உள்ளன.
இந்த நிலையில், விளையாட்டு என்பது பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆயுதமாகவும், கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் களமாக இருப்பதை அறிந்த ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ், முன்னணி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை எடுத்து கூறி இளைஞர்களை ஊக்குவித்து வருகிறது.
விளையாட்டு தொழில்துறையில் முன்னேற்றம் அடையவும், வாழ்வாதாரத்தின் மேம்பாட்டிற்கு உதவியாகவும் இருப்பதை உணர்த்தவே ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கிரிக்கெட், கால்பந்து மட்டுமின்றி அனைத்து விதமான உள்ளூர் விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தும் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ், கட்டுரைகள், வீடியோக்கள், தனித்தனுவமான உரையாடல்கள் மூலம் வெற்றியை அடையும் கனவுகளுக்கு விதையிடுகிறது.
உதாரணமாக ஒரு வீரர் விளையாட்டில் வெற்றிக்கான நுணுக்கங்களையும், புதுமைகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியமானது. அதை அடிப்படையாக கொண்டு சுவாரசியமான வாழ்வில் சாதனை படைத்த வீரர்களை கட்டுரைகள் மூலம் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களும், விளையாட்டு ஆய்வாளர்களும் கொண்ட ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் குழு, மிகப்பெரிய அளவில் விளையாட்டு போட்டிகளையும், தொடர்களையும் பதிவு செய்து வீரர்களை ஊக்கப்படுத்துகிறது.
விளையாட்டு போட்டிகளை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல் வீரர்களின் வெற்றிக்கான பயணங்கள், சவால்கள், சறுக்கல்களையும், பயிற்சிகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் பகிர்ந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு உதவியாக உள்ளது. நாடு முழுவதும் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் புத்துணர்வுடைய தேசத்தை உருவாக்க முடியும் என்பதில் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் அதீத நம்பிக்கையை வைத்து செயல்படுகிறது.
விளையாடினால் மட்டும் போதுமா, அதை எப்படி வெளியே கொண்டு வருவது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் வழங்குகிறது. விளையாட்டுத்துறையில் கொட்டி கிடக்கும் வாய்ப்புகள், பயிற்சியாளர்கள், ஸ்பான்சர்ஷிப், வேலைவாய்ப்பு, அங்கீகாரம், போட்டிகள் நடைபெறும் இடம், போட்டிகளின் தரவரிசை, பிசியோதெரபி பயிற்சி, உளவியல் பயிற்சிகள் குறித்தும் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் உடனுக்குடனான தகவல்களை பகிர்ந்து கொள்கிறது.
இப்படி விளையாட்டு வீரர்களையு, பயிற்சிக்கான வழிமுறைகளையும் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு பகிர்ந்து கொள்ளும் போது, ஒலிம்பிக்கில் இளம் வீரர்கள் வெற்றிப்பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.