நியூபெர்க் நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ரூ. 200 கோடி முதலீடு செய்கிறது

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்தியாவில் செயல்படும் 4 சங்கிலித்தொடர் முன்னணி ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் இன்று 14 நியூபெர்க் மேம்பட்ட டயக்னாஸ்டிக்ஸ் & உடல் பரிசோதனை மையங்களை சென்னையில் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்த நிதி ஆண்டிற்குள் 100 மையங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.அனைவருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், உடல் பரிசோதனை மற்றும் வீட்டிற்கு வந்து பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.