திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா

திருச்சி  தூய  வளனார்  கல்லூரியில்  மாற்றுத்திறனாளிகள்  அமைப்பு சார்பாக உலக பிரெய்லி தினம்  கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.  தலைமையேற்றார். தம் உரையில் ஜனவரி 4  உலக பிரெய்லி தினம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் விழாவாக நடைபெறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.கல்லூரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இதைப்போல பல நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனத் தாம் விரும்புவதாகத் தம் உரையில் பதிவு செய்தார்.