விஎஸ் மருத்துவமனையில் முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவு பிரத்யேகமாக அறிமுகம்

மருத்துவத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் விஎஸ் மருத்துவமனை இன்று முதியோருக்கான புற்று நோயியல் பிரிவை பிரத்யேகமாக தொடங்கியுள்ளது. இது தென்னிந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த முதியோர் புற்று நோயியல் பிரிவாகும். இப்பிரிவின் தொடக்க விழா நிகழ்ச்சியில் வி.எஸ். குழும மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன் பேசியதாவது: புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு தெரியவருகிறது. முதிவருக்கான நோய் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகப் பெரும் சவாலாக உள்ளது. சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்களை தீர்க்கும் பாலமாக முதல் முறையாக முதியோர் புற்றுநோயியல் பிரிவு விஎஸ் மருத்துவமனையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது.