தமிழ்நாடு நட்சத்திர மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

சென்னை: தமிழ்நாடு நட்சத்திர மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் இச்சங்கத்தின் மாநில தலைவர் கே. பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.எம் கோபாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர் தனசேகர், துணைச் செயலாளர் கார்த்திக், பொருளாளர் ஃபயர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் திரைப்பட வில்லன் நடிகர் முனைவர் என். டி. பிரபுதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மூத்த நடன கலைஞர் நிக்ஸன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

முக்கிய நிகழ்வாக சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகிகளான ஜோதிரகு, கமிட்டி தலைவர்.அஜித் செந்தில்,கமிட்டி உறுப்பினர்களான மூத்த நடன கலைஞர் முனுசாமி,தேவி, அம்மு செந்தில், பூஜா, சட்ட ஆலோசகர் சரவணன்,சமூக சேவகர் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின்
இறுதியில் இச்சங்கத்தின் மாநில தலைவர் கே. பாலாஜி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆபாச நடனத்தை நிறுத்த வேண்டும், நடன கலைஞர்களுக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும், நடன கலைஞர்களுக்கு உழைப்பேற்றுக்கேற்று உரிய ஊதியம் வழங்க வேண்டும், நடனநிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது சங்கத்தில் முன்னறிவிப்பு செய்து பங்கேற்றால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Previous post Launch of ‘Healthy Aging Clinic’ & ‘Dr. Mohan’s On Wheels’ to Enhance Diabetes Care and Accessibility
Next post The Akshaya Patra Foundation Amplifies the Partnership with BW LPG India to Fuel Mid-Day Meals across India