
சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’ (WEMAAA)
இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூகமுன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின்புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் எனபலவற்றை பரிசீலனை செய்து, விவாதிக்கும் வகையில் மாநாடு ஒன்று ‘வெமா’ (WEMAAA) எனும் பெயரில் சென்னையில் நடைபெற்றது.
இந்தியாவில் இயங்கும் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா மட்டுமல்லாமல் பல சர்வதேச நாடுகளில் இருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு பெரு நிறுவனங்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்டபல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பான பல்வேறு கருத்துருக்கள், சமூக அறிவியல் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் கூற்றுப்படி அடுத்து வரும் 15 முதல் 20 ஆண்டுகாலம், புவியின் இயல்பு நிலைக்கு சவாலான காலம் என ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு நம்முடைய அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமான… சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமடைதலின் சமநிலை தொடர்பாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அகஸ்திய முனிவர் அருளிச்சென்ற விசயங்களை, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு எளிதாக நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதம், பல்வேறுகோணங்களில் நடைபெற்றது.
More Stories
Jiivi2 Premiers from 19th Aug 2022
Jiivi2 : Jiivi2OnAHA #aha100PercentTamil Vetri-A call taxi driver,curiosity person,a brainy and a bookworm.Character name-Saravana Karunakaran- Tea master,innocent and he will always ask...
THE FIFTH BIG CINE EXPO IS BEING HELD ON 16-17 AUGUST 2022 AT CHENNAI TRADE CENTRE, INDIA
The fifth edition of the cinema exhibition industry’s most awaited big cine expo 2022 is set to make its comeback...
Mindful Walkathon Event at Dr. M.G.R. EDUCATIONAL AND RESEARCH INSTITUTE UNIVERSITY
In today’s Mindful Walkathon Event Department of Commerce made the highest participation ofDr. M.G.R. EDUCATIONAL AND RESEARCH INSTITUTE UNIVERSITY CHENNAI....
“பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது” ; ஜீவி-2 விழாவில் சீமான் பேசியதன் அர்த்தம் இதுதான்
“தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம்” ; ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை “சுரேஷ் காமாட்சி தன்னிடமுள்ள கெட்ட பழக்கத்தை தொடர வேண்டும்” ; ஓய.ஜி.மகேந்திரன் கோரிக்கை...
சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக அடையாளம்பட்டில் உள்ள E...
FREE BICYCLE DISTRIBUTION PROGRAMME FLAG OFF AT KATTUPALLI
Chennai, August 11, 2022: At a function today, Shri Jai Khurana, CEO – Southern Ports flagged of the proposed bicycle...