வேலை வாய்ப்புகளை நனவாக்கும்‌ ஜாஃபயர்‌ (ZAPHIRE)

ஜாஃபயர்‌ (ZAPHIRE) தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ சேவைகள்‌ நிறுவனமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களின்‌ வேலைவாய்ப்பு கனவை நினைவாக்கிக்‌ கொண்டு வருகின்றது.

உலகின்‌ முதல்‌ அனைத்து வீடியோ சமூக பணியமர்த்தல்‌ தளமாகும்‌. தன்னுடைய குறிக்கோளாக Fast, Fair, Fun (வேகமான, நியாயமான மற்றும்‌ வேடிக்கையாக) கொண்டு இளைஞர்களை பணியமர்த்தி அவர்களை வெற்றிப்பாதையில்‌ பயணிக்க வழி செய்து கொண்டிருக்கிறது. இந்த பணியமர்த்தல்‌ அனைத்தும்‌ நம்‌ செல்பேசி மூலமே நடைபெறுகிறது.

வேலை தேடும்‌ இளைஞர்கள்‌, படித்து கொண்டு இருக்கும்‌ மாணவ/மாணவிகள்‌ வேலை மாற்றம்‌ வேண்டும்‌ என்று நினைப்பவர்கள்‌ அனைவருக்கும்‌ இது சிறந்த வரப்பிரசாதமாகும்‌.

இன்றைய நவீன வேலை தேடுபவர்களுக்காக ஜாஃபிர்‌ செயலி அப்ளிகேஷன்‌ மூலம்‌ எளிமையாக தன்னுடைய வீடியோ ரெசியூமை உருவாக்க முடியும்‌.

வேலை தேடுபவர்‌ வீடியோ ரெசியூமை பதிவேற்றம்‌ செய்தவுடன்‌ ஜாஃபிருடன்‌ தொடர்பில்‌ உள்ள நிறுவனங்கள்‌ அவரை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணைகளை வழங்குகின்றனர்‌. இதன்‌ மூலம்‌ நிறுவனங்களும்‌ தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை காலவிரையமின்றி தேர்ந்தெடுத்துக்‌ கொள்கின்றனர்‌.

நிறுவனங்களும்‌ வேலைத்தேடுபவர்களுக்கும்‌ ஒரு பாலமாக செயல்படுகிறது. இளைஞர்கள்‌ தன்‌ மென்‌ திறன்களை வளர்த்துக்‌ கொள்ள உதவியாக நேர்காணல்‌ பயிற்சி பட்டறை குழு விவாதம்‌ மனித வள மேம்பாட்டு அதிகாரிகளின்‌ நேர்காணல்‌ போன்ற நிகழ்ச்சிகளையும்‌ வழங்கக்‌ கொண்டிருக்கிறது. இந்திய அளவில்‌ 200க்கும்‌ மேற்பட்ட கல்வி நிறுவனங்கள்‌, 75க்கும்‌ மேற்பட்ட பன்னாட்டு மற்றும்‌ தேசிய அளவில்‌ புகழ்‌ பெற்ற நிறுவனங்கள்‌ ஜாஃபயருடன்‌ புத்துணர்வு ஒப்பந்தம்‌ செய்துள்ளன.

இந்த நிறுவனத்தின்‌ செயல்‌ அதிகாரியாக திரு. திவான் கமாலியேல் செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌ சுமார்‌ 20 ஆண்டுகளுக்கு மேலாக தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ வங்கி மேலாண்மை துறையில்‌ அனுபவம்‌ பெற்றவர்‌

தன்னுடைய செயல்பாடுகள்‌ மூலம்‌ மகாத்மா காந்தி விருது சிறந்த தொழில்நுட்ப விருது சிறந்த ஸ்டார்‌ அப்‌ விருதுகளை பெற்றுள்ளார்‌…

Previous post சென்னை பூந்தமல்லி – திருவள்ளூர் சாலையில் திருமழிசை பஸ் நிலையம் அருகில் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் (Madras City Properties) ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஸ்ரீராமகிருஷ்ணா கார்டன் வீட்டு மனை பிரிவு விற்பனை துவக்க நிகழ்ச்சி
Next post <strong>Orchids The International School – Perumbakkam launches reward program ‘Well Done Ride’</strong>