அடுத்தடுத்தக்கட்ட வளர்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய கேமிங் நிறுவனமான Zupee
சென்னை : இந்தியாவின் மிகப்பெரிய திறன் அடிப்படையிலான கேசுவல் கேமிங் நிறுவனமான Zupee ஆனது, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் உடன் முதன்முறையாக உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளது. 450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஃப்யூட்சர்-ரெடி சூழல் அமைப்பில் பயனர் ஈடுபாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவான ஒருங்கிணைப்பை இது ஏற்படுத்தும் என்பது ஹைலைட். இந்தப் புதிய கூட்டாண்மை மூலமாக, Zupee வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விரைவான மற்றும் திறமையான வளர்ச்சி மற்றும் விநியோகத்தை எளிதாக்கும் ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அதோடு, ஜியோ பயனர்களுக்கு Zupee-யின் ஆன்லைன் திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் Zupee உருவாக்கும் பிற புதுமையான தயாரிப்புகளுக்கான அணுகலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Zupee நிறுவனர் மற்றும் CEO தில்ஷர் சிங் பேசும்போது, “ Zupee எப்போதும் அறிவியல் சார்ந்த மனித வளர்ச்சி மற்றும் கலாச்சாரம் சார்ந்த ஸ்டார்ட் அப்பாக இருக்க விரும்புகிறது. அதன்படி, இந்தியாவின் சிறந்த பொறியியல் திறமை, படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. புதுமையின் எல்லைகளைத் தாண்டி, பயனர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் நன்மை சார்ந்த தொழில்நுட்பத்திற்கான இலக்குடன் இயங்கிவருகிறது. இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்குள் ஊடுருவி, மிகவும் பின்தங்கிய மக்களிடம் சென்று சேர்வதற்கு, சரியான கூட்டாளியாக ஜியோவுடன் கைகோர்த்துள்ளது. இது திறந்த, அனுமதியற்ற, பரவலாக்கப்பட்ட மற்றும் வரம்பற்றதாக இருக்கும் எதிர்கால இணையத்தைப் பற்றிய எங்கள் யோசனையுடன் உறுதியாக இந்தக் கூட்டணி ஒத்துப்போகிறது. இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது 2020-21ல் 3.6 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2025-26ல் 55 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 15 மடங்கு வளர்ச்சியாக இருக்கும்.” என்றார்.