ஃப்ரெஷ்ஒர்க்ஸ் மாரத்தான் 2023 நிகழ்வில் 20,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பு!

சென்னையில் இன்று நடைபெற்ற 11வது பதிப்பின் ஆண்களுக்கான முழு மாரத்தான் நிகழ்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. வினோத் குமார் சீனிவாசனும், பெண்களுக்கான முழு மாரத்தான் நிகழ்வில் கென்யாவைச் சேர்ந்த பிரிஜிட் ஜெரண்டு கிமித்வாய் என்ற வீராங்கனையும் வெற்றி வாகை சூடினர். ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023 பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் நிகழ்வில் இடம்பெற்ற பல்வேறு வகையினங்களின் கீழ் மொத்தத்தில் 20,000-க்கும் அதிகமான துடிப்பும் ஆர்வமும் கொண்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இன்று காலை நடைபெற்ற மாரத்தான் போட்டியின் வழித்தடம் நெடுகிலும் வெவ்வேறு இடங்களில் ஆர்வமிக்க மக்கள் பெருந்திரளாக கூடியிருந்து இந்நிகழ்வில் பங்கேற்ற 20,000 ஓட்டப்பந்தய வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.