எலும்பு மஜ்ஜை மாற்று குழந்தைகளுக்கான சந்திப்பு

சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி, காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனை (கேகேசிடிஎச்), அரிய ரத்தக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்தப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்பதை வலியுறுத்தவும் இன்று எலும்பு மஜ்ஜையை மாற்றி உயிர் பிழைத்த குழந்தைகள் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இதன்மூலம் வெற்றிகரமான சிகிச்சைக்கு பிறகு சாதாரண வாழ்க்கை வாழ முடியும். இந்த நிகழ்ச்சியில் 25 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் தொடர்ந்து சிறப்பான செயல்பாடு,  ஒரு பங்கிற்கு ரூ. 2.98 தொகை அறிவிப்பு

நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் (என்எஸ்இ: என்எக்ஸ்டி/பிஎஸ்இ: 543913), இந்தியாவின் முதலாவது சில்லரை வர்த்தக நிறுவனம், ஆர்இஐடி, செப்டம்பர் 30, 2023-அன்றுடன் முடிவடைந்த தனது இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை (முதலாவது முழு காலாண்டு) வெளியிட்டுள்ளது. நெக்சஸ் மால் நிர்வாக பிரைவேட் லிமிடெட் இயக்குநர் குழுவினர்தான் நெக்சஸ் செலக்ட் டிரஸ்டின் நிர்வாகிகளாவர். முன்னதாக நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு  அதற்கு நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர், 17 நவம்பர் 2023: தஞ்சாவூர் மாநகரில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன்உயர் சிகிச்சை வழங்கும் மிகப்பெரிய மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளவயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின் மூலம் காப்பாற்றியிருக்கிறது.