
எலும்பு மஜ்ஜை மாற்று குழந்தைகளுக்கான சந்திப்பு
சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி, காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனை (கேகேசிடிஎச்), அரிய ரத்தக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்தப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்பதை வலியுறுத்தவும் இன்று எலும்பு மஜ்ஜையை மாற்றி உயிர் பிழைத்த குழந்தைகள் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இதன்மூலம் வெற்றிகரமான சிகிச்சைக்கு பிறகு சாதாரண வாழ்க்கை வாழ முடியும். இந்த நிகழ்ச்சியில் 25 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.