ரூ.20 கோடி மதிப்பிலான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. என்று முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்
பிட் ஃபி என்ற பழைமை வாய்ந்த பொருட்களை ஏலம் விடும் நிறுவனம் 2019 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது .
ஓவியங்கள், கலைப்பொருட்கள், அரியவகை பொக்கிஷங்கள், நாணயங்களை காட்சிபடுத்தி ஏலம் விடும் நிகழ்வு ஜூலை 27 தொடங்கி ஜூலை 31 வரை 5 நாட்கள் பிட் ஃபீ நிறுவனர் கிஷோர் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
உலக அளவில் பழைமை வாய்ந்த கலைப் பொக்கிஷங்கள், நாணயங்கள், கரன்சி நோட்டுகள், அரிதான மற்றும் கலைநயம் மிக்க ஓவியங்கள் எலத்தின் மூலமாக சந்தைபடுத்துதலை நோக்கமாகவும், குறிக்கோளாகவும் கொண்டது பிட் ஃபீ நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்திற்கு என்று மதிப்பு மிக்க கலை ஆர்வலர்களாய் வாடிக்கையாளர்கள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ளனர்.
இவர்கள் தொழிலதிபர்கள், செல்வந்தர்களாக இருப்பினும் பொழுதுபோக்கிற்காகவும் சிலர் ஓவியங்களும் வைத்து அதை கௌரவப்படுத்தி அழகு பார்க்கிறார்கள் .
அதையே ஏலம் மூலம் சந்தைபடுத்தி இலாபமும் ஈட்டுகிறார்கள் . இவர்களுக்கு இணைப்பு பாலமாக பிட் ஃபீ நிறுவனம் ஒழுங்கு முறையை உருவாக்கி கலைஞர்கள் திறமைக்கு உயரிய மதிப்பை உருவாக்குகிறது.
ஓவியங்கள் என்பது மனித இனத்தின் வாழ்வியலையும் காலச்சுவடுகளையும் பிரதிபலிக்கிறது . இதுவே நம் அன்றாட வாழ்வின் அங்கமாக திகழ்கிறது . முற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை சித்தரிக்க முயல்வதும், நம் கற்பனைக்கு எட்டாத காலத்தில் கண்ணாடியாக குகை ஓவியங்கள் திகழ்கிறது. அதன் தொடர்ச்சியே நவீன கால நுணுக்கங்களுக்காகவும் அதை வரையும் ஓவியர்களின் திறனுக்காவும் மதிப்பு உயர்ந்து ஓவியங்கள் அதிக தொகைக்கு விலை போகிறது.
பிற்காலத்தில் அதே ஓவியங்கள் காட்சிப்படுத்தும் போதும் சந்தைப்படுத்தும் போதும் மேலும் மேலும் அதிக தொகைக்கு விலை போகிறது .
அது மட்டுமல்லாது உலக அளவில் நாணயங்கள், பழைய கரன்சி நோட்டுகள், பழங்கால தபால் தலைகள், அரிதான அறிவியல் கண்டுபிடிப்பு கருவிகள், ஆகியவற்றை சேகரித்து பிட் ஃபீ நிறுவனம் காட்சிப்படுத்தி ஏலம் விடும் நிகழ்வை நடத்துகிறது .
காலத்தின் கதைகளை கூறும் படியான உலகின் புகழ்பெற்ற தலைவர்கள், மாமனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களைப் பற்றிய தகவல்கள், வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் கூட பிட் ஃபீ நிறுவனத்தில் ஏலத்தின் மூலம் கிடைக்கப் பெறலாம் . மக்கள் சேகரித்து வைத்திருக்கும் பழமை வாய்ந்த பொருட்கள், கேமராக்கள் ரேடியோக்கள் சிலைகள், வண்ண ஓவியங்கள் அனைத்தையும் கலை ஆர்வலர்கள் கலை பொக்கிஷங்களை சேகரிப்பதை லட்சியமாக கொண்டவர்கள் இதன் மூலம் பலன் பெறலாம். இந்த பெரும் பழமை வாய்ந்த கலை பொக்கிஷங்கள் பற்றியும் நாணயம் ஓவியம் பற்றியும் இதில் மறைந்திருக்கும் வரலாற்று சான்றுகள் பற்றியும் இளைய சமுதாயம் அறியும் வண்ணம் இந்தியா முழுவதிலுமிருந்து இளைஞர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெறுகிறார்கள்.
என்றார்.
இந்த கண்காட்சி துவக்கவிழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- கலை பொருட்களை ஏலம் மற்றும் சந்தைபடுத்தல் செய்து வரும் பிட் ஃபீ நிறுவனர் எங்கள் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவர். இவர் கலைப்பொருட்களையும், அரிய வகை பொக்கிஷங்களையும் மதிப்புக் கூட்டி ஓவியர்கள்,கலை ஆர்வலர்களுக்கும் நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து செயல்படுவதால் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் எளிதாக அணுகும் வசதியை ஏற்படுத்தி தருகிறார். சென்னை லலித் கலா அகாடமியில் ரூ.20 கோடி மதிப்பிலான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவரின் பணியின் மூலம் இளம் தலைமுறையினர் ஊக்கம் பெறுவார்கள். மேலும் இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்று கூறினார்.
