பில்ராத் மருத்துவமனை, புதிய இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளைத் தொடங்குகிறது!

Oplus_16908288

பில்ராத் மருத்துவமனை, புதிய இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளைத் தொடங்குகிறது!
விரிவான ஒருங்கிணைந்த பராமரிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அத்துடன் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவருக்கு ₹20 லட்சம் நிதியுதவி வழங்கியது, பில்ராத் ட்ரஸ்ட். இதன் மூலம் மேம்பட்ட மருத்துவம், நோயாளிக்கு முன்னுரிமை என்கிற அதன் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாடு வலுப்படுகிறது.

சென்னை, பிப்ரவரி 28, 2026

நகரின் முன்னணி பல்நோக்கு மருத்துவ மையங்களில் ஒன்றாகவும், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் – லேசர் சிகிச்சை முறைகளில் முன்னோடியாகவும் இருக்கிறது சென்னை பில்ராத் மருத்துவமனை (Billroth Hospitals). சென்னை, தி லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (பிப்ரவரி 28, 2026) நடைபெற்ற விழாவில், ஒரு புதிய இதய செயலிழப்பு கிளினிக் (Heart Dysfunction Clinic) மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன் (Pulmonary Embolism Referral Center) அதன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளை தொடங்கியதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை பில்ராத் மருத்துவமனை எட்டியது.

இதய மாற்று அறுவைசிகிச்சை திட்டம், இதயச் செயல் குறைபாடு சிகிச்சை – இதய மறுவாழ்வு மையம், நுரையீரல் உயர்ரத்த அழுத்த சிகிச்சை மையம், நுரையீரல் தமனியில் ரத்த உறைவு மருத்துவப் பரிந்துரை மையம் ஆகியவை இந்த சேவையில் அடங்கும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த, துல்லியமான, மக்கள் நலனை மையமாகக் கொண்ட இதய – நுரையீரல் பராமரிப்பை வழங்க உள்ளன.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜேஷ் ஜெகநாதன், வெற்றிகரமாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பயனாளி ஒருவருக்கு இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கினார். அனைவரையும் நெகிழச் செய்த இந்த மகத்தான செயல், மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு மூலம் மறுவாழ்வு அளிப்பது மட்டுமல்லாமல், அறுவைசிகிச்சைக்குப் பிறகும் நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதில் மருத்துவமனை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

சிறப்பு, அவசர, மேம்பட்ட பராமரிப்பு திறன்களுக்கான இதய மையம்:
2003ஆம் ஆண்டில் செயல்பாடுகளைத் தொடங்கிய இந்த மருத்துவமனையின் இதயவியல் துறை, சிக்கலான இதய நோய்களைக் கையாளுவதற்கு மேம்பட்ட நுட்பங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து கையாண்டு சிக்கலான இதய நோய்நிலைகளுக்குத் தீர்வளிக்கும் ஒரு சிறந்த சிகிச்சை மையமாக வளர்ந்துள்ளது.

50,000-க்கும் மேற்பட்ட கேத் லேப் நடைமுறைகள், 10,000-க்கும் மேற்பட்ட சி.டி.வி.எஸ் (CTVS) அறுவைசிகிச்சைகளைச் செய்த பாரம்பரியத்துடன், இதய சிகிச்சைத் துறையில் புதிய தரநிலைகளை பில்ராத் மருத்துவமனை உருவாக்குகிறது. இந்த மருத்துவமனை தற்போது ஷெனாய் நகர், ஆர்.ஏ. புரம் கிளைகளில் 24×7 மணிநேரமும் மேம்பட்ட இதய அவசர சிகிச்சை சேவைகளை வழங்கி வருகிறது. இது உடனடி நிபுணத்துவ ஆலோசனை மற்றும் தீவிர சிகிச்சை நாள் முழுவதும் கிடைப்பதை உறுதிசெய்கிறது.

மருத்துவமனையின் இதயவியல் பிரிவு, IVUS (உள் ரத்த நாள அல்ட்ராசவுண்ட்), FFR (இயற்பியல் உறுப்புச் சிதைவு மதிப்பீடு), Rotablator (சுழற்சி அதெரெக்டோமி) மற்றும் மேம்பட்ட EP ஆய்வு வசதிகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட மூன்று மேம்பட்ட கேத் லேப்களுடன், சிக்கலான இதய, ரத்த நாள நடைமுறைகளுக்கான விரிவான சி.டி.வி.எஸ் அறுவைசிகிச்சை ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த நவீன அமைப்புகள் துல்லியத்தை அதிகரிப்பதோடு, சிகிச்சை முடிவுகளை மேம்படுத்தி, அதிக ஆபத்துள்ள – சிக்கலான பாதிப்புகளை நம்பிக்கையுடன் கையாள உதவுகின்றன.

பில்ராத் மருத்துவமனை பற்றி:
பில்ராத் மருத்துவமனை நவம்பர் 30, 1990 அன்று மறைந்த டாக்டர் வி. ஜெகநாதனால் நிறுவப்பட்டது, இது சாதாரண 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குள், இது கூடுதலாக 70 படுக்கைகளுடன் விரிவடைந்து, இறுதியில் 650 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாக வளர்ந்தது. டாக்டர் ஜெகநாதனின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் இந்த மருத்துவமனை, அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் தரமான மருத்துவப் பராமரிப்பை வழங்குவதில் உறுதியாக உள்ளது. இந்த நோக்கம் திறமையான மருத்துவர்கள், மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம், நன்கு பயிற்சி பெற்ற துணைமருத்துவ ஊழியர்களைக் கொண்ட அர்ப்பணிப்புள்ள குழுவால் ஆதரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் விரிவான பராமரிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்.

புதுமை, துல்லியம் மற்றும் கனிவான மருத்துவ சேவையை வழங்குவதில் உறுதியுடன் இருக்கும் பில்ராத் மருத்துவமனை, உலகத்தரம் வாய்ந்த இதய – நுரையீரல் பராமரிப்பை சமூகத்திற்கு வழங்குவதில் தொடர்ந்து புதிய அளவுகோல்களை உருவாக்கி வருகிறது.

கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தைப் பாருங்கள்: www.billrothhospitals.com