உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் திரைப்பட நடிகர் கலைமாமணி டெல்லி கணேஷ் எழுதிய பிள்ளையார் சுழி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலினை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட முதல் பிரதியை எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக்கொண்டார்.
மேலும் இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் வசந்த், எஸ். சாய், ரங்கராஜ் பண்டே, பத்திரிகையாளர் மை.பா. நாராயணன், மத்யமர் முகநூல் குழுமத்தின் தலைவர் சங்கர் ராஜரத்தினம், உறுப்பினர் சுவாமிநாதன், திருவல்லிக்கேணி நகைச்சுவையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். சேகரன் உரத்த சிந்தனை சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன், செயலாளர் உதயம் ராம் மற்றும் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
