இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
அஞ்சு பாய் கட்டாரியா மற்றும் ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் சுதந்திர தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை பெரம்பூர் வீனஸ் பூங்கா எதிரில் இதன் நிறுவனத்தலைவர் மனித நேயர் முனைவர் உத்தம் சந்த் கட்டாரியா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளரும், வி. பி. செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகியுமான முனைவர் மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பாதுகாப்பு அதிகாரி, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுசுயா டெய்சி ஆர்னெஸ்ட், சின்னத்திரை நடிகர் சங்க இளம் தலைவர் பரத், சான்ஸ் விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனர் சுதா சந்திரசேகர், லயோலா கல்லூரி ஆங்கிலத்துறை துணை பேராசிரியர் முனைவர் ஜென்சி,
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் தொழிலதிபர் சடகோபன் ராஜு, பத்மபிரியா ராஜு, புலவர் சுகுமாரி,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பசுமை நாயகன் உமாநாத்,சமூக ஆர்வலர் முனைவர் தனசேகர், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முனைவர் உத்தம் சந்த் கட்டாரியா அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினை சமூக ஆர்வலரும், நடிகருமான முனைவர் பிரவீன்குமார் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்திருந்தார்.
மேலும் பன்முக திறன் பேச்சாளர், இளம் புரட்சியாளர் ஸ்டாலின் பாரதி சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து கவிதை வடிவில் திறம்பட பேசி அசத்தினார்.
மேலும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெரம்பூர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்றாட தேவைக்கான அரிசி உள்ளிட்ட உபயோக பொருட்கள், விலையில்லா பழ மரக்கன்றுகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், அறுசுவை உணவுகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இதில் 1000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு பயன்பெற்றனர்.
