கொரோனாவுக்கு பின் தைராய்டு கண்நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது!
சென்னை: “பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சனைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண் நோய் (TED) பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னை மாநகரில் ஏறக்குறைய 25% அதிகரித்திருக்கிறது. தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும் பெருந்தொற்று காலத்தின்போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் கட்டுப்பாட்டின் கீழ் தைராய்டு அளவுகள் இல்லாத நிலை இந்த TED பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்,” என்கிறார் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், மருத்துவ சேவைகள் துறையின் தலைவருமான டாக்டர். அஸ்வின் அகர்வால்.
கண் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மற்றும் அழகியல் சேவைகள் துறையின் தலைவர் டாக்டர். பிரித்தி உதய் பேசுகையில், “பெருந்தொற்று காலத்தின்போது தைராய்டு கண் நோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை நாங்கள் கவனித்திருக்கிறோம். கோவிட் – 19 தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவமனைக்கு செல்வதை நோயாளிகள் தவிர்த்ததனாலும் தைராய்டு அளவுகளை உரிய காலஅளவுகளில் பரிசோதிக்க தவறியது இதற்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்,” என்று குறிப்பிட்டார்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி, தைராய்டு கண்நோய்க்கு சுயமுனைப்புடன் ஸ்க்ரீனிங் செய்துகொள்ள வேண்டுமென்று மேற்குறிப்பிடப்பட்ட இடர்வாய்ப்பிலுள்ள மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். “தைராய்டு ஹார்மோன் அளவுகளை கட்டுக்குள் வைத்திருப்பதும் மற்றும் கண் அறுவைசிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவமுள்ள மருத்துவரிடம் குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனை செய்துகொள்வதும், தீவிரமான நோய் வராமல் முன்தடுப்பதற்கு ஒரே வழிமுறையாகும்,” என்று அவர் கூறினார்.