வாக்ஸ் குழுமத்தின் வாக்ஸ் விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக 19ம் ஆண்டு நிறுவனர் தின விழா

தொடர்ந்து 19 ஆண்டுகளாக பள்ளிக் கல்லூரி மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தாரின் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் தங்களின் அறக்கட்டளையின் சார்பாக, வழங்கப்பட்டு வருவதாக வாக்ஸ்
குழுமத்தின் தலைவர் ராவணன் தெரிவித்துள்ளார்..

வாக்ஸ் குழுமத்தின்
வாக்ஸ் விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக 19ம் ஆண்டு நிறுவனர் தின விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வாக்ஸ் குழுமத் தலைவர் ராவணன் ஞானசுந்தரம் அவர்களின் தலைமையில் குழுமத்தின் இயக்குநர்கள்,கவிதா ராவணன் மற்றும் இந்திரஜித் ராவணன் ஆகியோர் முன்னிலையில்,
நடைபெற்ற இந்த மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைகள் வழங்கும் விழாவில்,

வாக்ஸ் அறக்கட்டளையின் சார்பாக 600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, பார்வையற்ற பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டது..

இதில் ஓய்வுப்பெற்ற குடிமைப் பணி அதிகாரியும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரின் தனிச் செயலாளருமான
ராஜரத்தினம், முன்னாள் ரோட்டரி சங்கத்தின் ஆளுநரும் எமரால்ட் பதிப்பகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒளிவண்ணன்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்…

நிறுவனர் நாள் நிகழ்ச்சியில் பேசிய வாக்ஸ் குழுமத்தின் தலைவர் ராவணன் ஞானசுந்தரம் கூறுகையில்,

வாக்ஸ் அறக்கட்டளை இதுவரை 25000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகைகளை வழங்கியுள்ளதாகவும், தங்களின் அறக்கட்டளை ஒரு லாப நோக்கமற்ற வகையில் ஏழை, எளிய மக்கள், கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உயர்தர கல்வி கிடைப்பதற்காக பாடுபடும் ஒரு தொண்டு நிறுவனம் என்று தெரிவித்தார்

vox #voxgroup #voxpatnam #voxhospitality #voxfoundation #voxagro #voxcrafts #voxrealties #voxindustries #voxsippi #voxcrescendo #voxvanam #voxvalavan #voxpannai #voxkoodal #voxvirutcham #chennai #tamilnadu #FoundersDay2026 #legacyofservice