பாமக பொருளாளரும், கவிஞருமான ம.திலகபாமா’வின் “இப்படிக்கு திலகபாமா” நூல் வெளியீடு
பாமக பொருளாளரும், கவிஞருமான ம.திலகபாமாவின் நூல் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. செய்தி அலை பதிப்பகத்தின் “இப்படிக்கு திலகபாமா” என்ற நூலை மூத்த பத்திரிகையாளர் மாலன் வெளியிட சாணக்யா யுடியூப் சேனலின் நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜ் பாண்டே பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாமக பொருளாளர் திலகபாமா பேசியதாவது: திலகபாமா அரசியல், இலக்கியம் என இரண்டும் கலந்து நிற்பவள். எனக்கு இரண்டும் வேறு, வேறு அல்ல. அய்யா பெயரையும், சின்னய்யா பெயரையும்…
