பெட்ரோலியம் – இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் கட்டண முறையை மாற்றி அமைத்ததைத் தொடர்ந்து,காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் பிஎன்ஜி, சிஎன்ஜி கட்டணத்தை குறைத்தது திங்க் கேஸ் நிறுவனம்

• காஞ்சிபுரத்தில், சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 குறைக்கப்பட்டு ரூ.89.25 ஆகவும், வீட்டு உபயோக பிஎன்ஜி விலை கனசதுர மீட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு ரூ.47 ஆகவும் விற்பனை

• செங்கல்பட்டில், வீட்டு உபயோக பிஎன்ஜி விலை கனசதுர மீட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு ரூ.47 ஆக விற்பனை

காஞ்சிபுரம், ஜனவரி 7, 2026: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த கட்டண மாற்றத்தைத் தொடர்ந்து, திங்க் கியாஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் பிஎன்ஜி என்னும் வீட்டு உபயோக எரிவாயு மற்றும் சிஎன்ஜி என்னும் வாகன எரிவாயு விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு தூய்மையான சமையல் மற்றும் வாகன எரிபொருள் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் இந்த புதிய விலைகள் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விலை மாற்றம் அமலுக்கு வரும் நாளிலிருந்து, இப்பகுதிகளில் உள்ள வீட்டு உபயோகத்திற்கான குழாய் இயற்கை எரிவாயுவின் விலை கன மீட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு ரூ.47 ஆக விற்பனை செய்யப்படும்.. இந்த விலைக் குறைப்பின் காரணமாக இதைப் பயன்படுத்தும் குடும்பங்களின் சேமிப்பு அதிகரிப்பதோடு, அன்றாட சமையல் செலவும் குறையும்.
இதுதவிர, காஞ்சிபுரத்தில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலைகளும் புதிய முறையின் கீழ் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது தினசரி வேலைக்குச் செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து பயனர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். புதிய விலையின்படி, ரூ.1 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.89.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இது குறித்து திங்க் கியாஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அதிகாரி வினுகுமார் பாலகிருஷ்ணன் கூறுகையில், “பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் ஒருங்கிணைந்த கட்டண மாற்றம், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த விலையை வழங்க எங்களுக்கு வழிவகுத்துள்ளது. இது குடும்பங்கள் தங்கள் சமையல் செலவை குறைக்கவும், சிஎன்ஜி வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கவும் உதவும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இதன் மூலம், மற்ற எரிபொருட்களுக்கு இணையான ஒரு நம்பகமான மாற்று எரிபொருளாக பிஎன்ஜி இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் வீட்டு உபயோகத்தைப் பொறுத்தவரையில், இந்த விலைக் குறைப்பு என்பது விலையில் சுமார் 5 முதல் 6 சதவீதம் வரையிலான பலனைத் தரும். அதேபோல, பொது மற்றும் வணிகப் போக்குவரத்துத் துறையினர் உள்ளிட்ட சிஎன்ஜி பயனர்களுக்கு, இந்தத் திருத்தப்பட்ட விலை நிர்ணயமானது எரிபொருள் செலவை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த புதிய கட்டண மாற்றத்தின் நன்மைகள் குறித்தும், பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி-யை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்தும் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், இப்பகுதியில் பல்வேறு வாடிக்கையாளர் விழிப்புணர்வு முகாம்களை நடத்த திங்க் கியாஸ் திட்டமிட்டுள்ளது.

Top