காவேரி மருத்துவமனையில் இதய இயக்கமீட்புக்காகஇம்பெல்லா சிகிச்சை

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, சமீபத்தில் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட இதய தசையழற்சி பாதிப்புள்ள 18 வயதான இளைஞருக்கு இம்பெல்லா மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. தைரியமான, கற்பனைத்திறன் திறன் வாய்ந்த மற்றும் பயனளிக்கும் இந்த சிகிச்சை செயல்முறை மூலம் தமிழ்நாட்டில் இம்பெல்லா இதயமீட்பு செயல்திட்டத்தை இம்மருத்துவமனை தொடங்கியிருக்கிறது.  இதன்மூலம் திடீரென்று அதிக ஆபத்தான, இதயநோய் மற்றும் கார்டியோஜெனிக் அதிர்ச்சி பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு கேத் லேபிலேயே இம்பெல்லாவுக்கான கண்ட்ரோலரையும், பம்ப்பையும் இம்மருத்துவமனை கொண்டிருக்கிறது.