கோவை மாநகரில் நகரியங்கள் – ஒரு பாதுகாப்பான முதலீடு
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரம் என அறியப்படும் கோயம்புத்தூர், தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பெரு நகரங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம்மாநகரில் காணப்படும் வளர்ச்சியானது, அனைத்து பிரிவுகளிலும், குறிப்பாக உட்கட்டமைப்பை பொறுத்தவரை தொடர்ந்து வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தோடு இணைந்ததாக நிலம் மற்றும் சொத்துக்களுக்கான தேவையும் அதிகரிப்பது இயல்பானதே. கோயம்புத்தூரில் அவுட்டர் ரிங் ரோடு என அழைக்கப்படும் வெளிவட்டச் சாலை சமீப காலத்தில் மிகச்சரியான காரணங்களுக்காக குடியிருப்பு மற்றும் வர்த்தக மனைகளுக்கான முதலீட்டிற்கு அதிக வரவேற்பை பெறும் அமைவிடமாக உருவெடுத்திருக்கிறது.