40 நாட்களை கடந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்காத அரசை கண்டித்து சமூக செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜலீல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆட்சி மாற வேண்டும் என்பதற்காக விடிய விடிய எத்தனை தெருக்களில் ஓடி இருப்போம். துண்டறிக்கை கொடுத்து பிரச்சாரம் செய்து இருப்போம். எத்தனை வழக்குகளை சந்தித்து இருப்போம். உங்கள் கட்சிக்காரனாவது காசு வாங்கிக்கொண்டு உழைத்து இருப்பான். ஆனால், நாங்கள் எந்த பிரதி பலனும் இல்லாமல் உழைத்ததற்கு கிடைக்கக்கூடிய பரிசா இது. வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்டு 40 நாட்களை கடந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்காததை கண்டித்து சமூக…
