அக்டோபர் 26, 2021: இந்தியாவின் முதன்மையான நுண்வலைப்பதிவு தளமான ‘கூ’ஆப் மக்கள் தங்கள் தாய் மொழியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஊக்குவிப்பதற்கும், உரிமையை உறுதி செய்வதற்கும், தனது முதல் தொலைக்காட்சி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் மூலம், சமூக ஊடகங்களை சுய வெளிப்பாட்டிற்காகப் பயன்படுத்துவதற்கும், அவர்கள் விரும்பும் மொழியில் தங்கள் சமூகங்களுடன் இணைவதற்கும், விவாதிப்பதற்கும் பயனர்களை அழைக்கிறது.
2021 டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரத்தில் 20 வினாடி விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை ஓகில்வி இந்திய வடிவமைத்துள்ளது, இந்த காணொளி, தொடர்ச்சியான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதில் மக்கள், ஆன்லைனில் வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய கவர்ச்சியான சொற்களால், உள்ளார்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்க்கின்றனர். இந்த பிரச்சாரம் இணைய பயனர்களின் மனதையும் அவர்களின் சொந்த மொழியில் டிஜிட்டல் முறையில் தொடர்புகொள்ளவும் பகிரவும் அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தவும், வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது, கூவின் இந்த பிரச்சார விளம்பரங்கள், முன்னணி தொலைக்காட்சிகளில் இடம்பெறும்.