மதுரை: இந்தியாவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு பெருநிறுவனங்களுள் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் ஒரு பிராந்திய தொலைக்காட்சி அலைவரிசையான நியூஸ் 18 – ன் தமிழ்நாட்டின் மருத்துவ விருதுகள் 2022 நிகழ்வில், தென் இந்தியாவில் மிகச்சிறந்த ஆய்வகமாக மீனாட்சி லேப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. சி.விஜயபாஸ்கர் அவர்களிடமிருந்து, கௌரவம்மிக்க இவ்விருதை டாக்டர் ஜி.மதுசூதனன், தலைவர், மீனாட்சி லேப்ஸ் பெற்றுக்கொண்டார்.
உயர் மருத்துவ சேவை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளைக் கொண்டு உலகெங்கிலுமிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் தேடி வரும் அமைவிடமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதில் மருத்துவமனைகளின் பங்களிப்புகளை அங்கீகரித்து, பாராட்டுவதற்காக மருத்துவ விருதுகள் 2022 என்ற இந்த சீர்முயற்சி நியூஸ் 18 அலைவரிசையால் தொடங்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு வகையினங்களின் கீழ் வழங்கப்படும் இவ்விருதுகள், பல்வேறு உறுதியான அம்சங்களின் அடிப்படையிலான தேர்வு செயல்முறையை சார்ந்திருக்கின்றன.