வீடுகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், காஞ்சிபுரம் & செங்கல்பட்டு பகுதியில் “எல்.பி.ஜி ஃப்ரீ ஸோன்”(LPG Free Zone) அறிவித்தது திங்க் கேஸ் நிறுவனம்

PNGRB உடன் இணைந்து இன்று தொடங்கப்பட்ட இந்த அங்கீகார முயற்சியின் கீழ், 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் 7 பெரிய குடியிருப்பு சமூகங்களில் உள்ள வீடுகளுக்கு திங்க் கேஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் & செங்கல்பட்டு, மே 8, 2026: இந்தியாவின் முன்னணி சிட்டி கேஸ் விநியோக நிறுவனங்களில் ஒன்றான திங்க் கேஸ், குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை விரைவுபடுத்தும் நோக்கில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை (Petroleum and Natural Gas Regulatory Board) வாரியத்துடன் இணைந்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு புவியியல் பகுதியில் “எல்.பி.ஜி ஃப்ரீ ஸோன்”(LPG Free Zone) அறிவிப்பு நிகழ்ச்சியை இன்று நடத்தியது.

குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை ஊக்குவிக்கவும் அதிகரிக்கவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அர்பன்ரைஸ் – ரெவல்யூஷன் ஒன் குடியிருப்பில் பெரும்பாலான வீடுகள் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு மாறியதற்கான அங்கீகாரமாக, அக்குடியிருப்பு சமூகத்திற்கு “எல்.பி.ஜி ஃப்ரீ ஸோன்” சான்றிதழை திங்க் கேஸ் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை அதிகாரிகள் வழங்கினர்.

இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு புவியியல் பகுதியில் உள்ள 7 பெரிய குடியிருப்பு சமூகங்களை “எல்.பி.ஜி ஃப்ரீ ஸோன்” என திங்க் கேஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. எல்.பி.ஜி சிலிண்டர் பயன்பாட்டிலிருந்து குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புக்கு குறிப்பிடத்தக்க அளவில் மாறிய குடியிருப்புகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற்ற இந்த குடியிருப்புகளில் மொத்தமாக 4000-க்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு மாறியுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் முதலில் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளில், ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள SBIOA, விக்டோரியா டவர் (Victoria Tower), எம்பஸி ரெசிடென்சி (Embassy Residency), பொல்லினேனி பேஸ் 1 (Bollineni Phase 1), பொல்லினேனி ஐரிஸ் – பேஸ் 3 (Bollineni Iris (Phase 3), பொல்லினேனி பேஸ் 2 (Bollineni Phase 2) மற்றும் அர்பன் ரைஸ் ரெவல்யூஷன் 1 (Urban Rise Revolution 1) ஆகியவை அடங்கும்.

இந்த முயற்சியானது, குடியிருப்புகளில் வசிப்பவர்களை அதிக அளவில் பிஎன்ஜி-யை பயன்படுத்த ஊக்குவிக்கிறது. மேலும், குழாய் வழி எரிவாயு வசதியால் கிடைக்கும் வசதி, தடையற்ற வினியோகம் மற்றும் நீண்ட கால பயன்கள் பற்றிய விழிப்புணர்வையும் இது ஏற்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் தொடக்கம் குறித்து, திங்க் கேஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டலத் தலைவர் திருக்குமரன் N T கூறுகையில், “இந்த எல்.பி.ஜி ஃப்ரீ ஸோன்(LPG Free Zone) அறிவிப்பின் மூலம், குடியிருப்புகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை விரைவுபடுத்தவும், குழாய் எரிவாயு வசதி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தக் குடியிருப்புகளில் மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மேலும் பல குடும்பங்கள் எவ்வித சிரமமுமின்றி குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாறுவதற்கு முழு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் துணை இயக்குநர் அசுதோஷ் பட் கூறுகையில், “இந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை பயன்பாட்டை ஊக்குவிக்க திங்க் கேஸ் நிறுவனம் எடுத்துள்ள முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். எல்.பி.ஜி ஃப்ரீ ஸோன்களை அறிவிப்பது, விழிப்புணர்வை வலுப்படுத்துவதிலும், மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும், நகர எரிவாயு கட்டமைப்பின் பரந்த வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்தார்.

வரும் மாதங்களில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதி முழுவதும் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று ‘திங்க் கேஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக அளவில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பை பெறும் மேலும் பல குடியிருப்புகளுக்குச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் எரிவாயு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், அனைத்து வீடுகளுக்கும் எளிதாக எரிவாயு கிடைப்பதை அதிகரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய அளவிலான முயற்சிகளுக்கு, இந்த அங்கீகார நடவடிக்கை உறுதுணையாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

About THINK Gas – THINK Gas, the merged brand of AG&P Pratham and THINK Gas, is a leading player in India’s City Gas Distribution (CGD) business. We hold 19 CGD licenses awarded by the Petroleum & Natural Gas Regulatory Board (PNGRB) under the aegis of Ministry of Petroleum and Natural Gas (MoPNG) to exclusively develop CGD infrastructure and provide natural gas across 49 Districts in the 10 states of Andhra Pradesh, Bihar, Himachal Pradesh, Karnataka, Kerala, Madhya Pradesh, Punjab, Rajasthan, Uttar Pradesh and Tamil Nadu. Our CGD network will supply Compressed Natural Gas (CNG) for use in vehicles as well as Piped Natural Gas (PNG) to domestic households, commercial establishments and industries. Over the next few years, our network will comprise ~24,000 inch-km of steel pipelines, 2000+ CNG stations catering to the needs of more than 100 million customers and cover 324,000 square kilometres. THINK Gas has the largest Foreign Direct Investment (FDI) in greenfield CGD business in India. Our marquee investors include I-Squared Capital, and the Japanese consortium of OSAKA Gas, JOIN, Sumitomo Corporation and Konoike Transport. We have been recognized for our efforts on various industry forums for our contributions across all business practices – Safety, ESG, Marketing, CRM, Procurement, Sustainability and Risk Management.