வில்லிவாக்கம்: அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை சார்பில் வள்ளலார் பெருமகனாரின் 202 வது அவதார திருநாள் விழா, அன்னதான விழா 2024 ஆம் ஆண்டு மூன்றாவது செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வில்லிவாக்கத்திலுள்ள ஸ்ரீ மினி காமக்கோடி திருமண மண்டபத்தில் பேரவையின் நிறுவனத்தலைவர் எம். எஸ். சரவணன் பிள்ளை அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் செயல்தலைவர் எஸ். தாமோதரன் பிள்ளை அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் பொதுச்செயலாளர் பி. சுகுமார் பிள்ளை அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வினை பொருளாளர் டி. ஜி. தாயுமானவன் பிள்ளை அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வின் தொடக்கமாக இறை வணக்கப் பாடல், வள்ளலார் அவர்களின் அகவல் பாராயணம் மற்றும் சொற்பொழிவு நடைப்பெற்றது.
மேலும் இந்த நிகழ்வில் மூன்றாம் ஆண்டு செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. இறுதியாக வள்ளலார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் நிர்வாகிகள், நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திறளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் வி. அச்சுதரமேஷ் பிள்ளை அவர்கள் நன்றியுரை நல்கினார்.
இந்த செயற்குழுவில் தலைவராக எம். எஸ். சரவணன் பிள்ளை அவர்களும், பொதுச்செயலாளராக டி. ஜி தாயுமானவன் பிள்ளை அவர்களும், பொருளாளராக பி. சுகுமார் பிள்ளை அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


