வேட்டி என்பது வெறும் ஆடை அல்ல; நம் இந்தியர் ஒவ்வொருவருடைய அடையாளம்
நான் கடந்த வாரத்தில் இங்கிலாந்தில் இருந்தேன், அப்போது அங்கு வேட்டிக்கு அந்த நாட்டில் உள்ள மரியாதை மற்றும் இந்தியர்களுக்கு வேட்டியின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில் அங்குள்ள மக்கள் எப்படி மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்தேன். அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதில் பக்கீரப்பா என்னும் ஒரு விவசாயி தனது சொந்த நாடான இந்தியாவிலுள்ள பெங்களூர் நகரில் வேட்டி கட்டியதன் காரணமாக ஒரு வணிக வளாகத்தின் உள்ளே நுழைய மறுக்கப்பட்டது…
