‘கான்டம்பொரரி நவ் – எடிஷன் III’: (Contemporary Now – Edition III) சென்னை முழுவதும் முன்னோட்டம், உரையாடல்கள் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்களுடன் தொடங்கியது!

சென்னை, 7 ஆகஸ்ட் 2026: சென்னை முழுவதும் ஆகஸ்ட் 25 வரை நடைபெறவுள்ள கண்காட்சிகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளின் தொடக்கமாக, ‘கான்டம்பொரரி நவ் – எடிஷன் III’ (Contemporary Now – Edition III) கண்காட்சியின் 3வது பதிப்பு தனது அதிகாரப்பூர்வ முக்கிய பிரமுகர்கள் முன்னோட்டத்துடன் இன்று தொடங்கியது. இதில் கலைஞர்கள், கலைக்கூடங்களின் நிர்வாகிகள், கலைச் சேகரிப்பாளர்கள், பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வுகள் லலித் கலா அகாதெமியில் நடைபெற்ற பிரத்யேக முக்கிய பிரமுகர்கள் முன்னோட்டத்துடன் தொடங்கின. அங்கு வருகை தந்தவர்கள் ‘கான்டம்பொரரி நவ் – எடிஷன் III’: (Contemporary Now – Edition இன் பிரதான கண்காட்சியான “தொடர் கலைப் பயிற்சிகள்: படைப்பும் உலகமும்” (Practices in Continuum: The Work and the World) நிகழ்வைக் கண்டு களித்தனர்.

புரொஜெக்ட் 88, வதேரா ஆர்ட் கேலரி, எக்ஸ்பெரிமெண்டர், டார்க், சாட்டர்ஜி & லால், செமால்ட் ப்ரெஸ்காட் சாலை மற்றும் அஷ்விதாஸ் (Project 88, Vadehra Art Gallery, Experimenter, TARQ, Chatterjee & Lal, Chemould Prescott Road and Ashvita’s,) ஆகிய கலைக்கூடங்களின் படைப்புகளை உள்ளடக்கிய இந்தக் கண்காட்சி; அடையாளம், சூழலியல், நினைவுகள், அரசியல், கலைகள் வழியாக கலைஞர்கள் சொல்ல வரும் கருத்து மற்றும் பண்பாட்டு மாற்றங்களை மையமாகக் கொண்டு தற்காலக் கலைப் பயிற்சிகளை ஆராய்கிறது. மேலும், இன்றைய நவீன கலையை உருவாக்கும் சிந்தனைகளுடனும் பின்னணிகளுடனும் பார்வையாளர்கள் ஆழமாக இணைய இது ஊக்கம ளிக்கிறது.

அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் வாழ்வியல் ஊடகங்களின் முன்னணிப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான வழிகாட்டல் உலா, பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் கலைக்கூட நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்கள், மற்றும் ‘தற்காலக் கலை இப்போது’ அமைப்பின் இயக்குநர்களுடனான உரையாடல்களில் பங்கேற்றனர். இக்கலந்தாய்வுகள் கண்காட்சியின் பின்னணியில் உள்ள பார்வைகள் மற்றும் பார்வையாளர்களை ஒருங்கிணைப்பதில் இந்தத் தளத்திற்கு உள்ள அர்ப்பணிப்பு பற்றிய ஆழமான புரிதலை வழங்கின.

‘கான்டம்பொரரி நவ் – எடிஷன் III’: (Contemporary Now – Edition ) என்பது ஒரு தனிப்பட்ட கண்காட்சி மட்டுமல்லாமல், நகரம் முழுமைக்குமான ஒரு கலைத் தளமாகும். அதன் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் வகையில், இன்றைய நிகழ்வுகள் லலித் கலா அகாதெமியைத் தாண்டி சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் விரிவடைந்தன. இது உரையாடல்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் பார்வையாளர்கள் தற்காலக் கலையை அனுபவிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியது.

இன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக, அஷ்விதாஸ் ஃபிளாக்ஷிப் மையத்தில் நடைபெற்ற “மயிலாப்பூரிலிருந்து மும்பை வரை (மற்றும் அதற்கு அப்பாலும்): தற்காலக் கலையின் பின்னணியில் தென்னகப் பண்பாடு” (“From Mylapore to Mumbai (and Beyond): The Cultural South in the Context of Contemporary Art,) என்ற தலைப்பிலான கலந்துரையாடல் அமைந்தது.

பிரசாத் ராமமூர்த்தியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த விவாதத்தில் தற்காலகலை இப்போது (Contemporary Now) கண்காட்சி நிறுவனரும் அஷ்விதாஸ் இயக்குநரும் ராஜகோபாலன் பிராமல் ஆர்ட் பவுண்டேஷன் இயக்குநருமான திரு.ஈ.அஷ்வின் , கே. பெனிதா பெர்சியால் மற்றும் சாட்டர்ஜி & லால் நிறுவனத்தின் மோர்டிமர் சாட்டர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்காலக் கலைப் பயிற்சிகள், நிறுவனங்கள், பார்வையாளர்கள் மற்றும் கலைப் பொருட்களைச் சேகரித்தல் ஆகியவற்றை வடிவமைப்பதில் தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த விவாதம் ஆராய்ந்தது. கண்காட்சிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள உரையாடல்களையும் உருவாக்குவதில் ‘தற்காலக் கலை இப்போது’ அமைப்பிற்கு உள்ள அர்ப்பணிப்பை இந்த விவாதம் வெளிப்படுத்தியதுடன், இந்தியாவின் தற்காலக் கலைச் சூழலில் சென்னையின் விரிவடைந்து வரும் பங்கையும் சுட்டிக்காட்டியது.

இன்றைய நிகழ்வில் அஷ்விதாஸ் ஆவணக் காப்பகம் மற்றும் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற திறந்தவெளி நிகழ்வும் (Open House at Ashvita’s Archival and Conservation Centre) அடங்கும். இது கலைப் பாதுகாப்பு முறைகள் மற்றும் ஆவணக் காப்பகப் பணிகளைப் பார்வையாளர்கள் நேரடியாகப் பார்க்க வாய்ப்பளித்தது. இதனுடன், சென்னை அலையன்ஸ் ஃபிரான்சைஸ் மையத்தில் ‘அவதார் கலை அறக்கட்டளை’ (Avtar Foundation for the Arts at Alliance Française of Madras) வழங்கிய, சுசித்ரா விஜயன் தொகுத்து வழங்கிய “கட்டுக்கடங்காத உடல்கள்: அவதார் தொகுப்பிலிருந்து அரசியல் உடலைக் கண்டறிதல்” (Unruly Bodies: Sighting the Body Politic from the Avtar Collection, curated by Suchitra Vijayan) என்ற கண்காட்சியின் பிரத்யேக முன்னோட்டமும் இடம்பெற்றது.

இவை அனைத்தும், பண்பாட்டு நிறுவனங்கள் மற்றும் பங்காளிகளுடனான கூட்டு முயற்சிகளின் மூலம், தற்காலக் கலை குறித்த உரையாடல்களைக் கண்காட்சி மையங்களுக்கு அப்பாலும் விரிவாக்குவதி ‘கான்டம்பொரரி நவ் – எடிஷன் III’: (Contemporary Now – Edition )கொண்டுள்ள உறுதியைப் பிரதிபலித்தன.

இயக்குநர்களின் கருத்துகள்
இந்நிகழ்வு குறித்து ‘‘கான்டம்பொரரி நவ் – எடிஷன் III’: (Contemporary Now – Edition III) அமைப்பின் நிறுவனர் அஷ்வின் ஈ. ராஜகோபாலன் கூறுகையில்,”கான்டம்பொரரி நவ் –3வது பதிப்பு , ஒரு கலைப் படைப்பைத் தனிப்பட்ட பொருளாக மட்டும் பார்க்காமல், அது உருவாகும் பரந்த கலைப் பயிற்சியைப் புரிந்து கொள்ளுமாறு சேகரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. சென்னையின் முன்னணி கலைக்கூடங்கள், கலைஞர்கள், நிறுவனங்கள் மற்றும் பார்வையாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம், நமது நிகழ்காலத்தை வடிவமைக்கும் கலைப் பயிற்சிகளுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கவும், இந்தியாவின் தற்காலக் கலை அமைப்பில் சென்னையின் இடத்தை வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.”

‘கான்டம்பொரரி நவ் – எடிஷன் III’: (Contemporary Now – Edition )அமைப்பின் இயக்குநர் பிரியஞ்சலி பாசு கூறுகையில், “3வது பதிப்பு இன்றைய தற்காலக் கலைப் பயிற்சிகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதோடு, நகரம் முழுவதும் நடைபெறும் கண்காட்சிகள், உரையாடல்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் பார்வையாளர்கள் கலையுடன் இணையப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தப் பகிரப்பட்ட அனுபவங்கள் தற்காலப் பண்பாட்டைப் பற்றிய ஆர்வம், கற்றல் மற்றும் ஆழமான தொடர்புகளை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

நிகழ்வு விவரங்கள்
2026 ஆகஸ்ட் 25 வரை நடைபெறவுள்ள ‘கான்டம்பொரரி நவ் – எடிஷன்-III(Contemporary Now – Edition III) சென்னை முழுவதும் கண்காட்சிகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து நடைபெறுகிறது. பலவிதமான பார்வைகள், இடங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் தற்காலக் கலையை அனுபவிக்க இது பார்வையாளர்களை அழைக்கிறது. முன்னணி கலைக்கூடங்கள், கலைஞர்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் மூலம், தற்காலக் கலை, கற்றல் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய மையமாக சென்னை உருவெடுப்பதை இந்தத் தளம் மேலும் வலுப்படுத்துகிறது.

நிகழ்ச்சி: ‘கான்டம்பொரரி நவ் – 3வது பதிப்பு (Contemporary Now – Edition III)
தேதி: 8–25, ஆகஸ்ட்,2026.
பிரதான கண்காட்சி: லலித் கலா அகாதெமி, சென்னை

நகர்சார் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள்: (Citywide Programmes): அஷ்விதாஸ் ஃபிளாக்ஷிப், அஷ்விதாஸ் கேம்பஸ், அலையன்ஸ் ஃபிரான்சைஸ் டி மெட்ராஸ், ரா மாங்கோ, அப்பாராவ் கேலரீஸ், கேலரி வேதா மற்றும் சென்னை முழுவதும் உள்ள கூட்டாளர் மையங்கள். (Ashvita’s Flagship, Ashvita’s Campus, Alliance Française of Madras, Raw Mango, Apparao Galleries, Gallery Veda, and partner venues across Chennai.)