சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக அடையாளம்பட்டில் உள்ள E & S வளாகத்தில் சிறப்பாக 12.08.2022, வெள்ளி அன்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக Mr.E.கனகராஜ் ,Assistant Commissioner of Police, அம்பத்தூர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கினார்.

நமது இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் ஆணைக்கிணங்க 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட உள்ளோம். எனவே Dr.MGR பல்கலைக்கழக நிறுவனர் Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் Er.A.C.S.அருண்குமார் அவர்கள் ஆசியோடும், Vice Chancellor Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேலு அவர்கள், கூடுதல் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதல் படி, வணிகவியல் துறையின் தலைவர் டாக்டர்.சி.பி செந்தில்குமார் அவர்கள் மற்றும் பேராசிரியர்களும், 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

Previous post <strong>FREE BICYCLE DISTRIBUTION PROGRAMME FLAG OFF AT KATTUPALLI </strong>
Next post “பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது” ; ஜீவி-2 விழாவில் சீமான் பேசியதன் அர்த்தம் இதுதான்