சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பாக கே .பி. கந்தன் முன்னிலையில், காரப்பாக்கம் எம். கே. பழனிவேல் தலைமையில் மாபெரும் எழுச்சிமிக்க கண்டன ஆர்பாட்டம்

அதிமுக கழக இடைக்கால பொதுச்செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க 21-12-2022 அன்று திமுக அரசின் மின்சார கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி, பால்விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய விலையேற்றங்களை கண்டித்து சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பாக சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி. கந்தன் முன்னிலையில் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் காரப்பாக்கம் எம் கே பழனிவேல் தலைமையில் மாபெரும் எழுச்சிமிக்க கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது.


இந்த மாபெரும் எழுச்சிமிக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். இதில் பகுதி அவைத்தலைவர் பிரகாசம், பகுதி துணை செயலாளர் தினேஷ் பாபு, மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோபு ஞானப்பிரகாசம், பகுதி பொருளாளர் வெங்கடேசன், வட்டக் கழக செயலாளர் ஞானமூர்த்தி, ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார், நாகேந்தர், வெங்கடேசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சரவணன், அம்மா பேரவை இணை செயலாளர் புருஷோத்தமன், சோழிங்கநல்லூர் ஆர்.ராமு,ஜி. மோகனசுந்தரம், பத்ராஜ், டி.சகாதேவன், கே.கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம் கே சோமசுந்தரம் , பகுதி பிரதிநிதி சுதர்சன், சிவமணி, சிவலிங்கம்,சுடரொளி விநாயகம், உத்தண்டி வெங்கடேசன், மற்றும் மாநில கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Previous post “Mathrubhumi Daily” has tendered apology to Lottery businessman Mr. Santiago Martin
Next post <strong>A spectacular 2 day Clown Festival by international artists in Phoenix Marketcity </strong>