ICWO சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாநாடு!
சென்னை: சர்வதேச மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய சமுதாய நல அமைப்பு (ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாநாடு இந்திய சமுதாய நல அமைப்பின் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் தலைமையில் எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்த மாநாட்டில் சென்னை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் த்துறை மற்றும் ஹெச். எஸ். எஃப் இந்தியா அறக்கட்டளை மூலம்…
